பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

பிசிசிஐ விதிமுறையில் மாற்றம் செய்வது தொடர்பான வரைவு அறிக்கையை பிசிசிஐ தலைவர், செயலர், பொருளாளர் ஆகியோர் தாக்கல் செய்யாவிட்டால் 

பிசிசிஐ விதிமுறையில் மாற்றம் செய்வது தொடர்பான வரைவு அறிக்கையை பிசிசிஐ தலைவர், செயலர், பொருளாளர் ஆகியோர் தாக்கல் செய்யாவிட்டால் கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பிசிசிஐயை சீரமைக்கும் வகையில் லோதா கமிட்டியின் 
பரிந்துரையை அமல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பானவழக்கை வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா, செயலர் அமிதாப் செளத்ரி, பொருளாளர் அனிருத் செளத்ரி ஆகியோர் நேரில் ஆஜராகினர். 
அப்போது அவர்களை கடிந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்தாதது குறித்து தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். மேலும், பிசிசிஐ விதிமுறையில் மாற்றம் செய்வது தொடர்பான வரைவை தயார் செய்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு பிசிசிஐ தலைவர் உள்ளிட்ட 3 பேருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com