3-ஆவது ஒருநாள்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, தொடர் வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தூரில் நடக்கும் 3-ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
3-ஆவது ஒருநாள்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, தொடர் வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இன்று நடைபெறும் 3-ஆவது போட்டியிலும் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

மேலும், தங்கள் அணிக்கு ஏற்பட்டு வரும் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் தனது இரட்டைச் சதம் அடித்த ஆடுகளமாகும். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் இரட்டைச் சதமாகவும் இது திகழ்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணிக் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

இந்தியா:

ரோஹித் ஷர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, யசுவேந்திர சாஹல்.

ஆஸ்திரேலியா:

ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், பீட்டர் ஹெண்ட்ஸ்காம்ப் (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், நாதன் கௌடர் நைல், கேன் ரிச்சர்ட்ஸன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com