இந்திய 'ஏ' அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

நியூஸிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்திய 'ஏ' அணி.

நியூஸிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்திய 'ஏ' அணி.
விஜயவாடாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 'ஏ' அணி தனது முதல் இன்னிங்ஸில் 63 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய 'ஏ' அணி 67.2 ஓவர்களில் 320 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 
இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 'ஏ' அணி 63.1 ஓவர்களில் 142 ரன்களுக்கு சுருண்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com