பெங்களூரு ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை பெங்களூரில் நடைபெறவுள்ளது.
பெங்களூரு ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை பெங்களூரில் நடைபெறவுள்ளது.

ஆனால் பெங்களூரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி அங்கு 54 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 

இந்த மழை அடுத்த சில தினங்களுக்கு தொடரும் என்றும், அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 4-ஆவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தைப் பொறுத்தவரையில் மழை நின்றதும் மைதானத்தின் ஈரப்பதத்தை நீக்கி உடனடியாக ஆட்டத்தைத் தொடங்குவதற்கான அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. எனினும் மழை நின்றால் மட்டுமே போட்டியை நடத்த முடியும். மாறாக மழை தொடருமானால், போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும்.

இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே மழை மிரட்டி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பேட்டிங்கிற்கு பிறகு மழை பெய்ததால், ஆஸ்திரேலியாவுக்கு 21 ஓவர்களில் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கொல்கத்தாவில் ஆட்டம் பாதிக்கப்படவில்லை என்றாலும், மழை காரணமாக பயிற்சி பாதிக்கப்பட்டது. இரு அணியினரும் உள் விளையாட்டரங்கிலேயே பயிற்சியில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com