வார்னர் செய்த தவறுக்கு நானே முழு காரணம்: மனைவியின் கண்ணீர் பேட்டி! 

வார்னர் செய்த தவறுக்கு நானே முழு காரணம்: மனைவியின் கண்ணீர் பேட்டி! 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் செய்த தவறுக்கு நானே முழு காரணம் என்று அவரது மனைவி கேண்டிஸ் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிட்னி: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் செய்த தவறுக்கு நானே முழு காரணம் என்று அவரது மனைவி கேண்டிஸ் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும்   விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் செய்த தவறுக்கு நானே முழு காரணம் என்று அவரது மனைவி கேண்டிஸ் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ‘சண்டே டெலிகிராப்’ நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் என் கணவர் சிக்கியதற்கும், அந்த தவறைச் செய்ததற்கும் நான்தான் காரணம் என உணர்கிறேன். அந்த குற்ற உணர்ச்சி என்னை முற்றிலுமாக கொன்றுவிட்டது.

எனது கணவரின் செயலுக்கு நான் மன்னிப்பு கோரவில்லை. அவரை மன்னித்துவிடுங்கள் என்று கேட்கவும் இல்லை. அவர்தான் இந்த குற்ற உணர்வில் இருந்து என்னையும், எங்கள் குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார்.

அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பாதியிலேயே திரும்பி வீட்டுக்கு வந்து, படுக்கை அறையில் என் முன்னால் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்து நானும், எனது குழந்தைகளும் கடும் மன வேதனை அடைந்தோம். இது இதயத்தை நொறுக்குவதாக இருந்தது.

முன்னதாக டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது வார்னருக்கும் தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் பொழுது எனது முன்னாள் காதலரான நியூசிலாந்து ரக்பி வீரர் சோனி பில் வில்லியம்ஸ் உடன் என்னை இணைத்து பேசியதால்தான் வார்னர் ஆத்திரமடைந்து மோதலில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அடுத்த போட்டியிலும் இத்தகைய கேலிகள் தொடர்ந்ததால் வார்னர் விரக்தியின் உச்சத்திற்கு சென்று, இத்தகைய காரியத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு கேண்டிஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com