மகளிர் கிரிக்கெட்: மிதாலி ராஜ் புதிய சாதனை!

மகளிர் கிரிக்கெட்டில் இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனையைப் படைத்துள்ளார்...
மகளிர் கிரிக்கெட்: மிதாலி ராஜ் புதிய சாதனை!

மகளிர் கிரிக்கெட்டில் இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் எட்வர்ட் சார்லோட்டே 191 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி, அதிக ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய வீராங்கனை என்கிற சாதனையை படைத்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் இன்றைய ஒருநாள் ஆட்டம், மிதாலி ராஜ் பங்கேற்கும் 192-வது ஒருநாள் ஆட்டம். இதையடுத்து மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீராங்கனை என்கிற
புதிய சாதனையைப் படைத்துள்ளார் மிதாலி ராஜ்.

1999-ல் அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். 

அதிக ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள வீராங்கனைகள்

192    மிதாலி ராஜ் 
191    எட்வர்ட் சார்லோட்டே 
167    ஜுலான் கோஸ்வாமி 

கடந்த வருடம், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார் மிதாலி. மேலும், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளவரும் மிதாலி தான். இதுவரை 192 ஒருநாள்  ஆட்டங்களில் விளையாடியுள்ள 35 வயதான மிதாலி ராஜ் 6295 ரன்கள் குவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

6295 ரன்கள் மிதாலி ராஜ்
5992 ரன்கள் எட்வர்ட் சார்லோட்டே
4844 ரன்கள் பெலிண்டா கிளார்க்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com