இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றுள்ளது...
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றுள்ளது.

நாகபுரியில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எனினும் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் ரன்கள் குவிக்க முடியாமல் திணறியது. விக்கெட் கீப்பர் ஏமி ஜோன்ஸ் மட்டும் அபாரமாக விளையாடி 119 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹெதர் நைட் 36 ரன்கள் எடுத்தார். இதர வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் இங்கிலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. 

இந்திய அணியில் அனைவருமே சிறப்பாகப் பந்துவீசினார்கள். ஜுலான் கோஸ்வாமி, கயாக்வாட், தீப்தி சர்மா, பூணம் யாதவ் ஆகிய வீராங்கனைகள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

202 ரன்கள் என்கிற எளிதான இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி அதை 45.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு அடைந்தது. தொடக்க வீராங்கனை மந்தனா 53 ரன்கள் குவித்து ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். கேப்டன் மிதாலி ராஜ் நிதானமாக விளையாடி 138 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது மிதாலியின் 50-வது அரை சதமாகும்.

அதேபோல தீப்தி சர்மாவும் 76 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தீப்தி சர்மா ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை விருதைப் பெற்றார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது மந்தனாவுக்குக் கிடைத்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com