எனது வேண்டுதல் வீண்போகவில்லை: சாய்னா நேவால் தாய் உருக்கம்

இப்போட்டியில் சாய்னா, சிந்து இருவருமே மிகச் சிறப்பாக விளையாடினார்கள். சாய்னா இதில் வென்று மீண்டு வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 
எனது வேண்டுதல் வீண்போகவில்லை: சாய்னா நேவால் தாய் உருக்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வந்தனர்.

இந்நிலையில், மகளிர் பாட்மிண்டன் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர் களம் இறங்கினார். 

இந்தப் போட்டியில் பி.வி.சிந்துவை 21-18, 23-21 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார். பி.வி.சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

இதுகுறித்து சாய்னா நேவால் தாயார் உஷா ராணி கூறியதாவது:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சாய்னா நேவால் தங்கம் வென்றது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்தது முதல் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்வது மட்டுமே சாய்னாவுக்கு குறிக்கோளாக இருந்தது. 

இதற்காக அவர் கடுமையாகப் பயிற்சி செய்தார். சாய்னா பங்கேற்கும் இதுபோன்ற முக்கியப் போட்டிகளை பொதுவாக நான் பார்ப்பது கிடையாது. ஆனால் அந்த நேரத்தில் சாய்னா வெற்றிபெற வேண்டி பிரார்தனை செய்வேன். இப்போட்டியில் சாய்னா, சிந்து இருவருமே மிகச் சிறப்பாக விளையாடினார்கள். சாய்னா இதில் வென்று மீண்டு வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது வேண்டுதல் வீண்போகவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com