காமன்வெல்த் போட்டி நிறைவு: 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாமிடம்

கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
நிறைவு விழாவில் மேரிகோம் தலைமையில் அணிவகுத்துச் சென்ற இந்திய அணியினர்.
நிறைவு விழாவில் மேரிகோம் தலைமையில் அணிவகுத்துச் சென்ற இந்திய அணியினர்.

கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
கடந்த 4-ம் தேதி காமன்வெல்த் போட்டி வண்ணமயமாகத் தொடங்கி 12 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றனர். 26 தங்கம் உள்பட மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.
போட்டியின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை காரரா விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய கலைஞர்களின் இசைநிகழ்ச்சி, சாகச நிகழ்ச்சி, வாணவேடிக்கையுடன் விழா நடைபெற்றது.
நிறைவு விழா அணிவகுப்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தேசியக் கொடியேந்தி அணியை வழிநடத்திச் சென்றார். 
பளு தூக்குதலில் 9, துப்பாக்கி சுடுதலில் 16, டேபிள் டென்னிஸில் 8, பாட்மிண்டனில் 6, தடகளத்தில் 3, மல்யுத்தத்தில் 12, குத்துச்சண்டையில் 9, ஸ்குவாஷில் 2, பவர்லிப்டிங்கில் 1 என மொத்தம் 66 பதக்கங்களை இந்தியா வென்றது.
பாட்மிண்டனில் ஸ்ரீ காந்த், சிந்து, சாய்னா, குத்துச்சண்டையில் மேரிகோம், விகாஸ், மல்யுத்தத்தில் சுஷில்குமார், வினேஷ் போகட், டேபிள் டென்னிஸில் மனிகா பத்ரா, சரத்கமல், சத்யன், ஸ்குவாஷில் தீபிகா, ஜோஷ்னா, தடகளத்தில் நீரஜ்சோப்ரா, , பளு தூக்குதலில் சதீஷ் சிவலிங்கம், மீராபாய் சானு, துப்பாக்கி சுடுதலில் அனிஷ் பன்வாலா, ஜித்துராய், தேஜஸ்வனி உள்ளிட்டோர் முத்திரை பதித்தனர். 
காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அடுத்த காமன்வெல்த் போட்டிகள் வரும் 2022-இல் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com