71 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தி கொல்கத்தா அபாரம்

தில்லி டேர் டெவில்ஸ் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 
தலா 3 விக்கெட்களை வீழ்த்திய நரேன் ,யாதவ்
தலா 3 விக்கெட்களை வீழ்த்திய நரேன் ,யாதவ்

ராணா 59, நரேன், யாதவ் தலா 3 விக்கெட்


தில்லி டேர் டெவில்ஸ் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-தில்லி டேர் டெவில்ஸ் இடையே ஆன ஐபிஎல் போட்டியின் 13-வது ஆட்டம் ஈடன் கார்டன் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. 
டாஸ் வென்ற தில்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் கிறிஸ் லீன், சுனில் நரேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சுனில் நரேன் 1 ரன் எடுத்த நிலையில்ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ராபின் உத்தப்பா-கிறிஸ் லீனுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். உத்தப்பா 35 ரன்களிலும், லீன் 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதைத் தொடர்ந்து களம் கண்ட கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஆன்ட்ரே ரஸ்ஸல்-ராணா இணை சிறப்பாக ஆடி கொல்கத்தா அணியை சரிவில் இருந்து மீட்டது. ரஸ்ஸல் 41 ரன்களிலும், ராணா 59 ரன்களிலும், ஷுப்மன் கில் 6 ரன்னிலும், டாம் கர்ரன் 2 ரன்னிலும், பியுஷ் சாவ்லா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எடுத்திருந்தது. தில்லி அணியின் ராகுல் தேவதியா 3 விக்கெட்டுகளையும், பெளல்ட், மோரீஸ் தலா 2 விக்கெட்டுகளையும், நதீம், சமி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் தில்லி அணி சார்பில் கம்பீர், ஜேசன் ராய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராய் 1 ரன்னிலும், ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து துவக்கத்திலேயே அதிர்ச்சி தந்தனர். 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் 15 ரன்களையே எடுத்திருந்தது. 
ஷ்ரேயஸ் ஐயர் 4, ராகுல் தேவைதியா 1, விஜய் சங்கர் 2, மோரீஸ் 2, முகமது சமி 7, பெளல்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பந்த் 43 ரன்களுடனும், கிளென் மேக்ஸ்வெல் 47 ரன்களைக் குவித்தும் தில்லியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
கொல்கத்தா அணியின் சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாவ்லா, ரஸ்ஸல், சிவம் மவி , டாம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
14.2 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களையே தில்லியால் எடுக்க முடிந்தது. இறுதியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com