7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் இடையே ஆன ஐபிஎல் 15-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ரஹானே, ஆர்சி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் 7-வது ஓவர் முடிவில் ரஹானே 36 ரன்களில் தினேஷ் கார்த்திக்கால் ரன் அவுட் செய்யப்பட்டார். சஞ்சு சாம்சன் 7 ரன்களுக்கு சிவம் மவி பந்தில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் நிலையாக ஆடி வந்த ஆர்சி ஷார்ட் 44 ரன்களில் நிதிஷ் ராணா பந்துவீச்சில் போல்டானார். ராகுல் திரிபாதி 15 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் ரஸ்ஸலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் பென் ஸ்டோக்ஸ் 14 , கிருஷ்ணப்பா கெளதம் 12 , தாவல் குல்கர்னி 3 ரன்களிலும் ஷ்ரேயஸ் கோபால் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஜோஸ் பட்லர் 24 ரன்களுடனும், உனதிகட் ரன் ஏதுமின்றியும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை ராஜஸ்தான் அணி குவித்திருந்தது.
கொல்கத்தா தரப்பில் டாம் கர்ரன், நிதிஷ் ராணா தலா 2 விக்கெட்டுகளையும், சிவம், குல்தீப் யாதவ், சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேன், கிறிஸ் லீன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் 2 பந்துகளை சந்தித்த நிலையில் லீன், கெளதம் பந்துவீச்சில் போல்டானார். சுனில் நரேன் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்களில் ரன் அவுட்டானார். 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 48 ரன்கள் விளாசிய உத்தப்பா, கெளதம் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா அணி 12.3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 102 ரன்களை எடுத்திருந்தது.
பின்னர் நிதிஷ் ராணா, கேப்டன் தினேஷ் கார்த்திக் இணை பொறுமையாக ஆடத் தொடங்கியது. 2 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் தினேஷ் கார்த்திக் 42 ரன்களுடனும், 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் நிதிஷ் ராணா 35 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
இறுதியில் 1.1 ஓவர் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 163 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் தரப்பில் கெளதம் 2 விக்கெட்டுளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com