அனுமதியின்றி எனது பெயர் பயன்படுத்தப்படுகிறது: தோனி வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

அனுமதியின்றி தனது பெயர் பயன்படுத்துவதாக தோனி தொடர்ந்த வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அனுமதியின்றி எனது பெயர் பயன்படுத்தப்படுகிறது: தோனி வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

அனுமதியின்றி தனது பெயர் பயன்படுத்துவதாக தோனி தொடர்ந்த வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, பல தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக செயல்பட்டு வருகிறார். உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர் என்பதால் விளம்பரம் மூலமாகவே ஆண்டொன்றுக்கு பல நூறு கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

இந்நிலையில், தன்னுடனான ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் தனது பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து வருவதாக மேக்ஸ் மோபிலிங்க் எனும் தனியார் நிறுவனத்தின் மீது மகேந்திர சிங் தோனி, தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், அந்த நிறுவனத்துடன் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் விளம்பர ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இதையும் மீறி எனது பெயரையும், புகைப்படத்தையும் அவர்களின் நிறுவன விளம்பரங்களில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதை உடனடியாக நிறுத்தவும், இதுவரை பயன்படுத்தியதற்கான ஊதியத்தை வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அதன் உரிமையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com