ஹைதராபாத்-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஹைதராபாத் சன் ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே ஆன ஆட்டம் மொஹாலியில் வியாழக்கிழமை இரவு நடைபெறவுள்ளது. 
ஹைதராபாத்-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஹைதராபாத் சன் ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே ஆன ஆட்டம் மொஹாலியில் வியாழக்கிழமை இரவு நடைபெறவுள்ளது. 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹைதராபாத்தும், மூன்றாமிடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதுவதால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கேன் வில்லியம்ஸன் தலைமையிலான ஹைதராபாத் அணி தான் பங்கேற்ற அனைத்து ஆட்டங்களிலும் பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் வென்றுள்ளது. அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி பேட்டிங்கில் வலுவான நிலையில் உள்ளது. இரண்டு போட்டிகளில் வெற்றி கண்டு, சென்னை அணியிடம் தோல்வியைத் தழுவியது.
ஹைதராபாத் அணியில் புவனேஸ்வர்குமார், ரஷீத்கான், ஸ்டேன்லேக், கெளல், ஷாகிப் ஹசன், சந்தீப் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். அதே போல் ரித்திமான் சாஹா, ஷிகர் தவான், மணிஷ்பாண்டே போன்ற பேட்ஸ்மென்களும் இடம் பெற்றுள்ளதால் வலுவுடன் திகழ்கிறது.
இதுவரை பெரிய அளவிலான ஸ்கோரை சன்ரைசர்ஸ் எடுக்கவில்லை. மும்பை அணிக்கு எதிராக 148, ராஜஸ்தான் அணிக்கு எதிராக 127 என குறைந்த ஸ்கோர்களையே பெற முடிந்தது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகின்றனர்.
அதே நேரத்தில் சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதால் பஞ்சாப் அணி உற்சாகத்துடன் காணப்படுகிறது. கிறிஸ் கெயில், ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், அஸ்வின் போன்றோர் சிறப்பான பார்மில் உள்ளனர். தில்லி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றது. பின்னர் பெங்களூரு அணியிடம் இரண்டாவது ஆட்டத்தில் தோல்வியடைந்தது.
அந்த அணியின் 17 வயது சுழற்பந்து வீச்சாளர் முஜிப்பூர் ரஹ்மான் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பந்துவீசி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com