உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: பதக்கம் குவிக்குமா இந்தியா?

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 2-ஆம் நிலை போட்டிகள் தென் கொரியாவின் சாங்வோன் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: பதக்கம் குவிக்குமா இந்தியா?

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 2-ஆம் நிலை போட்டிகள் தென் கொரியாவின் சாங்வோன் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் குவித்த இந்திய துப்பாக்கி சுடுதல் அணி, இந்தப் போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 ரைஃபிள், பிஸ்டல், ஷாட்கன் ஆகிய பிரிவுகளில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை போட்டியில் 70 நாடுகளைச் சேர்ந்த சுமார் 850 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சார்பில் 38 பேர் குழு இப்போட்டியில் பங்கேற்கிறது.
 முதல் நாளில் ஆடவர் மற்றும் மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ரவி குமார், தீபக் குமார், அர்ஜுன் பபுதா ஆகியோர் பங்கேற்கின்றனர். மகளிர் பிரிவில் அபூர்வி சந்தேலா, அஞ்சும் முட்கில், மெஹுலி கோஷ் ஆகியோர் களம் காண்கின்றனர்.
 ஒலிம்பிக்கில் நடைபெறவுள்ள அனைத்து துப்பாக்கி சுடுதல் பிரிவு போட்டிகளும் இந்த உலகக் கோப்பை போட்டியிலும் நடைபெறுகிறது. இப்போட்டி வரும் 30-ஆம் தேதி ஆடவருக்கான ஸ்கீட் இறுதிச்சுற்றுடன் நிறைவடைகிறது.
 முன்னதாக, மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் முதல் நிலையில், இந்தியா 4 தங்கம் உள்பட 9 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com