டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது.
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது.
 பெங்களூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்களூரு 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வென்றது. டி வில்லியர்ஸ் ஆட்டநாயகன் ஆனார். முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்துவீசியது. பேட் செய்த டெல்லியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 85 ரன்கள் சேர்த்தார். ஷ்ரேயஸ் ஐயர் 52 ரன்கள் எடுத்தார். எஞ்சியவர்களில், தொடக்க வீரர்களான ஜேசன் ராய் 5, கேப்டன் கெளதம் கம்பீர் 3, மேக்ஸ்வெல் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராகுல் 13, கிறிஸ் மோரிஸ் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு தரப்பில் யுவேந்திர சாஹல் 2, உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர், கோரே ஆன்டர்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
 டி வில்லியர்ஸ் அதிரடி: பின்னர் ஆடிய பெங்களூரில் தொடக்க வீரர் டி காக் 18, உடன் வந்த மனன் வோரா 2 ரன்களில் வெளியேறினர். கேப்டன் கோலி 30, கோரே ஆன்டர்சன் 15 ரன்களில் நடையைக் கட்ட, டி வில்லியர்ஸ்-மன்தீப் சிங் கூட்டணி அணியை வெற்றிபெறச் செய்தது. அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 90, மன்தீப் சிங் தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் டிரென்ட் போல்ட், மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com