மான்டி கார்லோ மாஸ்டர்ஸ்: இறுதிச்சுற்றில் நடால்-நிஷிகோரி பலப்பரீட்சை

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால்-ஜப்பானின் கெய் நிஷிகோரி பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ்: இறுதிச்சுற்றில் நடால்-நிஷிகோரி பலப்பரீட்சை

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால்-ஜப்பானின் கெய் நிஷிகோரி பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
 முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான நடால், உலகின் 5-ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.
 விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்றார். இத்துடன், டிமிட்ரோவை 12-ஆவது முறையாக சந்தித்த நடால், தனது 11-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
 வெற்றிக்குப் பிறகு பேசிய நடால் கூறியதாவது:
 ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமானதாகவும், அதேவேளையில் சிறப்பான ஒன்றாகவும் இருக்கிறது. இறுதிச்சுற்றில் எனக்கு மிகச் சரியான வாய்ப்பு கிடைக்கும் வகையில் கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. மேலும் ஒரு பட்டம் வெல்வது எனது நோக்கம் அல்ல. நான் விளையாட வேண்டிய வழிமுறைகளையும், அதற்காக நான் தயாராக இருக்க வேண்டியதையும் பற்றியே யோசிக்கிறேன் என்று நடால் கூறினார்.
 உலகின் முதல் நிலையில் இருக்கும் நடால், தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் பட்டத்தை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
 நிஷிகோரி வெற்றி: இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் உலகின் 4-ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி, இறுதிச்சுற்று வாய்ப்பை உறுதி செய்தார் உலகின் 36-ஆம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com