ஆசிய பாட்மிண்டன் போட்டி: 2-ஆவது சுற்றில் சாய்னா, சிந்து

சீனாவின் உஹானில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டி 2-வது சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா, சிந்து, ஸ்ரீ காந்த் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
ஆசிய பாட்மிண்டன் போட்டி: 2-ஆவது சுற்றில் சாய்னா, சிந்து

சீனாவின் உஹானில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டி 2-வது சுற்றுக்கு இந்தியாவின் சாய்னா, சிந்து, ஸ்ரீ காந்த் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
 அண்மையில் முடிவடைந்த காமன்வெல்த் போட்டி பாட்மிண்டனில் இந்திய அணியினர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்தனர். இந்நிலையில் உஹான் நகரில் ஆசிய சாம்பியன் போட்டிகள் நடைபெறுகின்றன. மகளிர் பிரிவில் சாய்னா 21-12, 21-9 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் இயோ ஜியா மின்னையும், பி.வி.சிந்து 21-14, 21-19 என்ற செட் கணக்கில் தைபேவின் பையுபோவை வென்று 2-ஆம் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அடுத்த சுற்றில் சாய்னா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவின் காவ் பாஜியையும், சிந்து சென் ஜியான்சியையும் எதிர்கொள்கின்றனர்.
 ஆடவர் பிரிவில் ஸ்ரீ காந்த் 13-21, 21-16, 21-16 என்ற கணக்கில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வென்றார். மற்றொரு வீரரான சமீர் வர்மா 21-23, 17-21 என்ற கணக்கில் தைபேவின் டின் சென்னிடம் தோல்வியடைந்தார். ஆடவர் இரட்டையர் அர்ஜுன்-ராமச்சந்திரன் சிலோக், மகளிர் இரட்டையர் மேகனா-பூர்விஷா ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை செளரப் சர்மா-அனுஷ்கா பரீக் , வெங்கட் கெளரவ்-ஜூஹி இணைகள் தோல்வியை சந்தித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com