இந்திய தடகள சங்க இணைச் செயலர் மறைவு

இந்திய தடகள சங்கம் (ஏஏஎஃப்ஐ) இணைச் செயலாளரும், தொழில்நுட்பக் குழு தலைவருமான டோனி டேனியல் (66) மாரடைப்பால் புதன்கிழமை கொச்சியில் காலமானார்.

இந்திய தடகள சங்கம் (ஏஏஎஃப்ஐ) இணைச் செயலாளரும், தொழில்நுட்பக் குழு தலைவருமான டோனி டேனியல் (66) மாரடைப்பால் புதன்கிழமை கொச்சியில் காலமானார்.
 கேரள மாநிலம் சார்பில் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்று வென்ற டேனியல் 1970-இல் மாநில ஓட்டப்பந்தய சாம்பியனாக திகழ்ந்தவர். கேரள மாநில தடகளச் சங்க செயலாளராக 8 ஆண்டுகள் செயல்பட்டவர். அண்மையில் கோவையில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை ஜூனியர் தடகளப் போட்டியிலும் பங்கேற்றார்.
 அவரது மறைவுக்கு ஆசிய தடகள சங்கம், இந்திய தடகள சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com