ஆசிய பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா, சிந்து, பிரணாய், ஸ்ரீகாந்த்

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டி காலிறுதிக்கு இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து, பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிய பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா, சிந்து, பிரணாய், ஸ்ரீகாந்த்

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டி காலிறுதிக்கு இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து, பிரணாய், ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
 சீனாவின் வுஹான் நகரில் பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனர்.
 ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா 21-18, 21-8 என்ற செட் கணக்கில் சீனாவின் கவ் பஞ்சியை எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் கொரியாவின் லி ஜங் மியை எதிர்கொள்கிறார். மூன்றாம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் ஜியானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
 ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங்கின் வொங் விங் கி காயமுற்று வெளியேறியதால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக்கில் மூன்று முறை வெள்ளிப் பதக்கம் வென்ற லீ சொங் வெய்யை எதிர்கொள்கிறார்.
 பிரணாய் 16-21, 21-14, 21-12 என்ற செட் கணக்கில் சீன தைப்பேவின் வாங் சு வெயை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அவர் கொரியாவின் சன் வான் ஹோவை சந்திக்கிறார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன்-ராமச்சந்திரன் இணை 11-21, 19-21 என்ற கணக்கில் சீனாவின் லி ஜின்ஹுயி, லியு யுன் சென் இணையிடம் வீழ்ந்தது. மகளிர் பிரிவில் இந்தியாவின் மேக்னா-பூர்விஷா இணை 9-21, 9-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ஜோங்கோல்பான்-ரவிண்டா இணையிடம் தோல்வியைத் தழுவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com