பஞ்சாபை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத் 

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இரு அணிகளிலும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.
பஞ்சாபை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத் 

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இரு அணிகளிலும் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.
ஹைதராபாத் சன்ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் 25-வது ஆட்டம் வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஹைதராபாத் அணி தரப்பில் ஷிகர் தவன், கேன் வில்லியம்ஸன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவன் 11, வில்லியம்ஸன் ரன் ஏதும் எடுக்காமலும், சாஹா 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் இணை சேர்ந்த மணிஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன் இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 
28 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். அப்போது 13.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களுக்கு ஹைதராபாத் அணி தத்தளித்துக் கொண்டிருந்தது. 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 54 ரன்களை சேர்த்த மணிஷ் பாண்டே ராஜ்புத் பந்துவீச்சில் போல்டானார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த முகமது நபியும் 4 ரன்களுக்கு ராஜ்புத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
20-வது ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு வெறும் 132 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணியில் அங்கித் ராஜ்புத் 5 விக்கெட்டுகளையும், முஜிப்புர் ரஹ்மான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் பஞ்சாப் அணி சார்பில் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி துவக்கத்தில் அதிரடியான ஆட்டம் மேற்கொண்டனர். 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் ராகுல் 32 ரன்களில் ரஷீத்கான் பந்தில் வீழ்ந்தார். கெயில் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 
சரிந்த விக்கெட்டுகள்: மயங்க் அகர்வால், கருண் நாயர் இணை தொடர்ந்து பொறுமையாக ஆடி வந்த நிலையில் வரிசையாக விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. மயங்க் அகர்வால் 12, கருண் நாயர் 13, ஆரோன் பின்ச் 8, மனோஜ் திவாரி 1, ஆன்ட்ரு டை 4, பரீந்தர் சான் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் அஸ்வின் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 17.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களையே எடுத்திருந்தது. கடைசி விக்கெட்டுக்கு ராஜ்புத்-முஜிப்புர் ரஹ்மான் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. ராஜ்புத் 8, முஜிப்புர் ரஹ்மான் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே பெற முடிந்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, பசில் தம்பி, ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியில் 13 ரன்களில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 
மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
பெங்களூரு, ஏப். 26: சென்னை சிஎஸ்கே அணியுடனான ஆட்டத்தின் போது மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெங்களூருவில் சென்னை-பெங்களூரு அணிகள் இடையே ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ராயுடு, தோனியின் அபார ஆட்டத்தால் சென்னை அணி வென்றது. சிஎஸ்கே அணிக்கு எதிராக மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக ஐபிஎல் நடத்தை விதிகளின்படி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஐபிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ரன்கள் 
சென்னை சிஎஸ்கே அணியின் அம்பதி ராயுடு இதுவரை 6 ஆட்டங்களில் 2 அரை சதங்கள் உள்பட 283 ரன்களை குவித்துள்ளார். ஆரஞ்சு கேப் அம்பதி ராயுடுவிடம் வந்துள்ளது.
அதிக விக்கெட்
மும்பை அணியின் மயங்க் மார்கண்டே 6 போட்டிகளில் பங்கேற்று 143 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பர்ப்பிள் கேப் அவர் வசமே உள்ளது.

இன்றைய ஆட்டம்
தில்லி-கொல்கத்தா 
இடம்: தில்லி, நேரம்: இரவு 8.00 
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com