பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: 3-ஆவது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் 3-ஆவது சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளார்.
பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: 3-ஆவது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் 3-ஆவது சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளார். 

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பின் மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.    

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்தோனேஷிய வீராங்கனை ஃபிட்ரியானியை எதிர்கொண்டார். 

தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சிந்து முதல் செட்டை 21-14 என கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது செட்டையும் பி.வி.சிந்து 21-9 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். இதன்மூலம் 21-14, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சிந்து 3-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இதே தினத்தில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஸ்பெயின் வீரர் அபியனை எதிர்கொண்டார். அதில், முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட ஸ்பெயின் வீரர் எழுச்சி பெற்று 21-12 என்ற கணக்கில் 2-ஆவது செட்டை கைப்பற்றினார். 

தொடர்ந்து நடைபெற்ற வெற்றியை தீர்மானிக்கும் 3-ஆவது செட்டை ஸ்ரீகாந்த் 21-14 என கைப்பற்றி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்றொரு இந்திய வீரரான பிரணாய் பிரேசில் வீரர் கோயெல்ஹோவை எதிர்கொண்டார். அதில், முதல் செட்டை 21-8 என்ற கணக்கில் பிரணாய் எளிதில் கைப்பற்றினார். ஆனால், அடுத்த 2 செட்களில் சொதப்பிய அவர் 16-21, 15-21 என இழந்து 1-2 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். 

ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்திய வீரர் சமீர் வெர்மா பிரான்ஸ் வீரர் லூகாஸ் கோர்வேவை எதிர்கொண்டார். அதில், சமீர் 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜப்பான் ஜோடியிடம் 14-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com