கட்டுக்கடங்காத ஜோ ரூட்: இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 12-ஆவது அரைசதம்

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 12-ஆவது முறையாக அரைசதம் அடித்து ஜோ ரூட் சிம்ம சொப்பணமாக விளங்கி வருகிறார்.
கட்டுக்கடங்காத ஜோ ரூட்: இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 12-ஆவது அரைசதம்

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 12-ஆவது முறையாக அரைசதம் அடித்து ஜோ ரூட் சிம்ம சொப்பணமாக விளங்கி வருகிறார். 

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் களமிறங்கினர். குக் 13 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் சுழலில் போல்டானார். இதையடுத்து, கேப்டன் ரூட் 3-ஆவது வீரராக களமிறங்கினார். 

இவர் இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 11 போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான இந்த ஃபார்மை இந்த போட்டியிலும் தொடர்ந்த ரூட் தொடர்ந்து 12-ஆவது முறையாக அரைசதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். 

இதே போட்டியில் இவர் மேலும் ஒரு மைல்கல்லையும் எட்டியுள்ளார். 6000 டெஸ்ட் ரன்களை கடந்த ஜோ ரூட் குறைந்த நாட்களில் இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை சொந்தமாக்கியுள்ளார். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 5 வருடம் 231 நாட்களில் இவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன் சகநாட்டு வீரரான குக் 5 வருடம் 339 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியதே சாதனையாக இருந்து வந்தது. இதனை ரூட் தற்போது முறியடித்துள்ளார். 

இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக அடித்த அரைசதங்கள்:

  • நாக்பூர், 2012 - 73 ரன்கள் (ஆட்டமிழக்கவில்லை)
  • நாட்டிங்காம், 2014 - 154 ரன்கள் (ஆட்டமிழக்கவில்லை)
  • லார்ட்ஸ், 2014 - 66 ரன்கள்
  • சௌதாம்ப்டன், 2014 - 56 ரன்கள்
  • மான்செஸ்டர், 2014 - 77 ரன்கள்
  • ஓவல், 2014 - 149 ரன்கள் (ஆட்டமிழக்கவில்லை)
  • ராஜ்காட், 2016 - 124 ரன்கள்
  • விசாகபட்டினம், 2016 - 53 ரன்கள்
  • மொகாலி, 2016 - 78 ரன்கள்
  • மும்பை, 2016 - 77 ரன்கள்
  • சென்னை, 2016 - 88 ரன்கள்
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com