பதவியேற்புக்கு இம்ரான் அழைத்தால் மத்திய அரசு அனுமதியுடன் கலந்துகொள்வேன்: கபில்தேவ்

இம்ரான் கான் பதவியேற்புக்கு முறைப்படி அழைப்பு வந்தால், நிச்சயம் மத்திய அரசின் அனுமதியுடன் கலந்துகொள்வேன் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ், வியாழக்கிழமை தெரிவித்தார்.
பதவியேற்புக்கு இம்ரான் அழைத்தால் மத்திய அரசு அனுமதியுடன் கலந்துகொள்வேன்: கபில்தேவ்

இம்ரான் கான் பதவியேற்புக்கு முறைப்படி அழைப்பு வந்தால், நிச்சயம் மத்திய அரசின் அனுமதியுடன் கலந்துகொள்வேன் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ், வியாழக்கிழமை தெரிவித்தார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான், விரைவில் பதவியேற்கவுள்ளார். இதையடுத்து இந்தியாவில் உள்ள அவரது சமகால கிரிக்கெட் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவுடனான நல்லுறவை விரும்புவதாகவும், காஷ்மீர் விவகாரத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில்,

இதுவரை எனக்கு அழைப்பு வந்துள்ளதா என்பது குறித்து இன்னும் பார்க்கவில்லை. ஒருவேளை அழைப்பு வந்தால் நிச்சயம் பாகிஸ்தான் சென்று இம்ரான் பதவியேற்பில் கலந்துகொள்வேன். மத்திய அரசின் அனுமதியுடன் இதில் நான் கலந்துகொள்வேன் என்றார்.

முன்னதாக, கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு இம்ரான் கான் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார். அதுபோல கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். எனக்கு தனிப்பட்ட முறையில் இம்ரானிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதை பெருமையாக கருதுகிறேன் என்று சித்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com