ஆண்டர்சன் சவாலை முறியடித்து சதமடித்த விராட் கோலி! (விடியோ)

இதர பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ஆண்டர்சன் பந்துவீச்சில்...
ஆண்டர்சன் சவாலை முறியடித்து சதமடித்த விராட் கோலி! (விடியோ)

கடந்தமுறை இங்கிலாந்து மண்ணில், 5 டெஸ்டுகளில் 134 ரன்கள் மட்டும் எடுத்த விராட் கோலி, இந்தமுறை ஒரே இன்னிங்ஸில் அதைத் தாண்டி தன் திறமையை இங்கிலாந்து மண்ணிலும் நிரூபித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று அபாரமாக ஆடி 225 பந்துகளில் 22 பவுண்டரியுடன் 149 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கோலியின் 22-வது டெஸ்ட் சதத்துக்கு முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் பலத்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

கோலியின் சதத்தைப் பகுத்தாய்வு செய்தால் அவருடைய பொறுப்புணர்வும் அசாத்தியமான திறமையும் வெளிப்படுகிறது. முக்கியமாக, ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளிப்படுத்திய சவாலை அருமையாக எதிர்கொண்டு அதைச் சமாளித்துள்ளார் கோலி. இதர பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ஆண்டர்சன் பந்துவீச்சில் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியும் கவனமாக விளையாடியுள்ளார். 

இங்கிலாந்தில் விராட் கோலி

2014 - 134 ரன்கள், 288 பந்துகள், 10 இன்னிங்ஸில். (சராசரி - 13.40)
2018 - 149 ரன்கள், 225 பந்துகள், 1 இன்னிங்ஸ்

கோலி vs இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள்

 கோலி எதிர்கொண்ட   பந்துவீச்சாளர்கள் பந்துகள் ரன்கள்  ஸ்டிரைக்   ரேட் 
 ஆண்டர்சன் 74 18 24.32%
 ஸ்டூவர்ட் பிராட் 22 18 81.82%
 சாம் கரன் 39 35 89.74%
 அடில் ரஷித் 34 26 76.47%
 பென் ஸ்டோக்ஸ் 56 52 92.86%

 கோலி 149 ரன்கள்

முதல் 50 ரன்கள் - 100 பந்துகள்
மீதமுள்ள 99 ரன்கள் - 125 பந்துகள்

வீரர்களுடன் கோலியின் கூட்டணி

9,10, 11-வதாகக் களமிறங்கிய பேட்ஸ்மேன்களுடன் விளையாடியபோது கோலி 116 பந்துகளையும் அந்த மூன்று பேட்ஸ்மேன்களும் 37 பந்துகளை மட்டுமே சந்தித்தார்கள். 

தவன், ரஹானே, கார்த்திக் - 21 ரன்கள் (49 பந்துகள்)
பாண்டியா, அஸ்வின் - 36 ரன்கள் (60 பந்துகள்)
ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் - 92 ரன்கள் (116 ரன்கள்)

கோலியின் அற்புதமான பேட்டிங்கின் விடியோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com