சச்சின், கவாஸ்கர் தரவரிசைப் புள்ளிகளை முந்திய விராட் கோலி! தொடரும் சாதனைகள்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதை எடுத்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன்...
சச்சின், கவாஸ்கர் தரவரிசைப் புள்ளிகளை முந்திய விராட் கோலி! தொடரும் சாதனைகள்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதை எடுத்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இதன் மூலம் முதலிடத்தை பெறும் 7-ஆவது இந்திய வீரர் எனற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது. 

எனினும் கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களையும், இரண்டாம் இன்னிங்ஸில் 51 ரன்களையும் குவித்து அதிரடியாக ஆடினார். இதன் மூலம் 31 புள்ளிகளை பெற்ற அவர், ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த 32 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ஸ்மித் பின்னுக்கு தள்ளப்பட்டார். தனது 67 டெஸ்ட் ஆட்ட வரலாற்றில் கோலி முதன்முறையாக நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் அந்தஸ்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாம்பவான் டெண்டுல்கர் கடந்த 2011-இல் தென்னாப்பிரிக்க வீரர் காலிஸுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். அதன்பிறகு முதலிடம் பிடித்த இந்திய வீரர் என்கிற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதன் விளைவாக, கோலி நிகழ்த்தியுள்ள சாதனைகள் 

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்டிங் ரேட்டிங்: இந்திய வீரர்கள் 

934 - விராட் கோலி (2018)
916 - சுனில் கவாஸ்கர் (1979)
898 - சச்சின் டெண்டுல்கர் (2002)
892 - ராகுல் டிராவிட் (2005)
888 - புஜாரா (2017)

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்

சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்கார், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக், கெளதம் கம்பீர், கோலி. 

சிறந்த பேட்டிங் ரேட்டிங் - இந்திய வீரர் 

டெஸ்ட்: விராட் கோலி - 934 ( 2018)
ஒருநாள்: விராட் கோலி - 911 (2018)
டி20: விராட் கோலி - 897 (2014)

டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்கள் என இந்த மூன்றின் தரவரிசையிலும் முதலிடம் பெற்ற பேட்ஸ்மேன்கள்

ரிக்கி பாண்டிங், விராட் கோலி.

டெஸ்ட், ஒருநாள், டி20 ஆட்டங்கள் என இந்த மூன்றின் தரவரிசையிலும் முதலிடம் பெற்ற பந்துவீச்சாளர்கள் 

ரவீந்திர ஜடேஜா, அஜ்மல்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகள் எடுத்துள்ள பேட்ஸ்மேன்கள்
 

1. 961 - டான் பிராட்மேன், 1948 

2. 945 - ஸ்டீவ் ஸ்மித், 2017

3. 945 - லென் ஹட்டன், 1954 

4. 942 - ஜேக் ஹாப்ஸ், 1912 

5. 942 - ரிக்கி பாண்டிங், 2006

14.  934 - விராட் கோலி, 2018

24. 916 - சுனில் கவாஸ்கர், 1979

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com