பாண்டியாவை விளையாட வைத்தது தவறு: லார்ட் டெஸ்டில் குல்தீப் யாதவைச் சேர்க்கச் சொல்லி ஹர்பஜன் சிங் வேண்டுகோள்!

முதல் டெஸ்டில் ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளருடன் விளையாடி இந்திய அணி தவறு செய்துவிட்டது...
பாண்டியாவை விளையாட வைத்தது தவறு: லார்ட் டெஸ்டில் குல்தீப் யாதவைச் சேர்க்கச் சொல்லி ஹர்பஜன் சிங் வேண்டுகோள்!

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது. 

இந்நிலையில் வியாழன் அன்று தொடங்கவுள்ள 2-வது டெஸ்டில், குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். இணையத்தளம் ஒன்றில் அவர் இதுகுறித்து கூறியதாவது:

முதல் டெஸ்டில் ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளருடன் விளையாடி இந்திய அணி தவறு செய்துவிட்டது. ஹார்திக் பாண்டியாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவைத் தேர்வு செய்திருக்கலாம். சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான நிலை இருந்ததால். எனவே இந்திய அணி ஆடுகளத்தின் தன்மை, வானிலை சூழல்களைச் சரியாகக் கணிக்கவில்லை. நான்கு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் எனத் தேர்வு செய்தது அவர்களுக்கு உதவவில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசினாலும் பாண்டியா அணி எதிர்பார்த்தபடி பந்துவீசவில்லை. இந்நிலையில் அவரை வைத்து ஏன் விளையாடுகிறீர்கள். குல்தீப்பால் இரு வழிகளிலும் பந்தைச் சுழவைக்கமுடியும். எனவே இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அவர் உதவுவார் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com