டேவிஸ் கோப்பை போட்டியில் மாறுதல்கள்: ஜோகோவிச் வரவேற்பு

டேவிஸ் கோப்பை போட்டியில் புதிய மாறுதல்களை வரவேற்பதாக விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
டேவிஸ் கோப்பை போட்டியில் மாறுதல்கள்: ஜோகோவிச் வரவேற்பு


டேவிஸ் கோப்பை போட்டியில் புதிய மாறுதல்களை வரவேற்பதாக விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
16 நாடுகள் இடையில் பல்வேறு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு டேவிஸ் கோப்பை போட்டிகள் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. மீதமுள்ள நாடுகள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் வெல்வோர் டேவிஸ் கோப்பை இறுதிச் சுற்று ஆட்டங்களுக்கு முன்னேறுகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) டேவிஸ் கோப்பை போட்டியில் மாறுதல்களை செய்ய முடிவு செய்துள்ளது. குறிப்பாக 18 நாடுகள் பங்கு பெறும் உலகக் கோப்பை டென்னிஸ் போட்டியாக இதை மாற்ற உத்தேசித்துள்ளது. ஏனென்றால் டென்னிஸ் வீரர்களுக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான போட்டிகள் இருப்பதால் சுமை அதிகமாகிறது என புகார்கள் உள்ளன.
இதனால் இதை சீசன் முடிவில் கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டியாக நடத்துவதால் சுமை குறையும் என பலர் தெரிவித்திருந்ததனர்.
இந்நிலையில் டேவிஸ் கோப்பை போட்டியில் மாறுதல்கள் குறித்து ஜோகோவிச் வியாழக்கிழமை கூறியதாவது:
போட்டியில் மாறுதல் செய்வது நல்லது தான். வீரர்களின் கடும் சுமை இதனால் குறையும், மேலும் போட்டிகளை திட்டமிட்டு விளையாட முடியும். மேலும் இதனால் போட்டியின் பரிசுத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும் என்றார்.
ஆர்லண்டோவில் இந்த மாத இறுதியில் நடைபெறும் ஐடிஎப் பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த மாறுதல்களுக்கு ஒப்புதல் பெற்றால் தான் அமுலுக்கு வரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com