பிசிசிஐ தொடர்பான நீதிபதி லோதா பரிந்துரைகள்: சில மாறுதல்களுடன் உச்சநீதிமன்றம் ஒப்புதல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய வரைவு சட்ட திட்டம் தொடர்பான நீதிபதி லோதா குழு பரிந்துரைகளுக்கு சில மாறுதல்களுடன் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
பிசிசிஐ தொடர்பான நீதிபதி லோதா பரிந்துரைகள்: சில மாறுதல்களுடன் உச்சநீதிமன்றம் ஒப்புதல்


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய வரைவு சட்ட திட்டம் தொடர்பான நீதிபதி லோதா குழு பரிந்துரைகளுக்கு சில மாறுதல்களுடன் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவிலேயே செல்வாக்கு, பணம் மிக்க விளையாட்டு அமைப்பாக பிசிசிஐ உள்ளது. தன்னாட்சி பெற்ற இந்த அமைப்பு எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. மேலும் ஐபிஎல் லீக் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டு, நீதிபதி முத்கல் குழு அறிக்கை தாக்கல் செய்தது.
இதனால் பிசிசிஐயை சீரமைப்பது தொடர்பாக பரிந்துரைகளை வழங்க உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா குழு 2015-இல் அமைக்கப்பட்டது. 
இக்குழுவும் பிசிசிஐ அமைப்பு தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி, பல்வேறு மாநில சங்கங்கள், நிர்வாகிகள், வீரர்கள், பொதுமக்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பரிந்துரைகளை அளித்தது. ஆனால் பரிந்துரைகளை பிசிசிஐ நிர்வாகிகள் செயல்படுத்ததால், அவர்களை நீக்கி விட்டு இந்திய கணக்கு முன்னாள் தணிக்கையாளர் சிஏஜி வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
இதற்கிடையே பிசிசிஐ புதிய சட்டத்திட்டம், விதிகள் தொடர்பாக அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை வியாழக்கிழமை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு நடைபெற்றது.
சிறிய மாறுதல்களுடன் நீதிபதி லோதா பரிந்துரைகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. குறிப்பாக ஒரு மாநிலம், ஒரு வாக்கு திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டது. இதன்படி ரயில்வே, சர்வீஸஸ், இந்திய பல்கலைக்கழகங்களின் உறுப்பினர் அந்தஸ்து நிலை நிறுத்தப்பட்டது. மேலும் மும்பை, செளராஷ்டிரா, பரோடா, விதர்பா சங்கங்களுக்கும் உறுப்பினர் அந்தஸ்து தக்க வைக்கப்பட்டு வாக்குரிமை தரப்பட்டுள்ளது.
மேலும் பிசிசிஐ அல்லது மாநில சங்கங்களில் நிர்வாகிகளாக உள்ளோர் பதவிக் காலத்துக்கு பின்னர் மீண்டும் மூன்றாண்டுகள் கழித்து தான் மீண்டும் போட்டியிட முடியும் என லோதா குழு பரிந்துரையில் இருந்தது. அதில் நிர்வாகிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகிக்க ஏதுவாக விதிமுறையில் உச்சநீதிமன்றம் மாறுதல் செய்துள்ளது.
இந்த புதிய சட்டதிட்டத்தை தமிழ்நாடு சங்கங்களுக்கான பதிவாளர் 30 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிசிசிஐ, மாநில சங்கங்களில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்த இருந்த முட்டுக்கட்டை நீங்கி உள்ளது. 
உச்சநீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு சிறப்பானது. இதன் மூலம் புதிய சட்ட திட்டம் முடிவு செய்யப்பட்டு தேர்தல்கள் நடத்தப்படும். இந்த உத்தரவை தொடர்புடையோர் அனைவரும் பின்பற்ற வேண்டும் என சிஓஏ நிர்வாகி வினோத் ராய், உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com