விஜய் அவுட் ஆன விதம் குறித்து சச்சினிடம் கேள்வி எழுப்பிய ஹர்பஜன்: தூஸ்ரா வீசிய சச்சின்!

உங்களுடைய தூஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தவர்களும் இதே போன்ற கேள்வியை எழுப்புகிறார்கள்...
விஜய் அவுட் ஆன விதம் குறித்து சச்சினிடம் கேள்வி எழுப்பிய ஹர்பஜன்: தூஸ்ரா வீசிய சச்சின்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு மளமளவென வீழ்ந்த நிலையில் அஸ்வின் மட்டும் 4 பவுண்டரிகள் உள்பட 29 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 20 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டம், முதல் நாளில் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில், 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங் செய்த இந்திய அணியில் முரளி விஜய்-லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். முரளி விஜயை முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஃப்ளிக் செய்ய விஜய் முயன்றபோது க்ளீன் போல்ட் ஆனார்.

இந்நிலையில் விஜய் அவுட் ஆன விதம் குறித்து ட்விட்டரில் சச்சினிடம் கேள்வி எழுப்பினார் ஹர்பஜன் சிங். இந்தப் பந்தை எப்படி விளையாடுவது? நீங்கள் விளக்க முடியுமா என வினவினார். 

இதற்குப் பதில் அளித்த சச்சின், ஆண்டர்சனின் அற்புதமான பந்து அது. ஆனால் உங்களுடைய தூஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தவர்களும் இதே போன்ற கேள்வியை எழுப்புகிறார்கள் என்று வேடிக்கையாகவும் அசத்தலாகவும் பதில் அளித்தார் சச்சின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com