பார்சிலோனா அணியின் புதிய கேப்டனாக மெஸ்ஸி நியமனம்

ஸ்பெயின் நாட்டின் கிளப் அணியான பார்சிலோனாவுக்கு லயோனல் மெஸ்ஸி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  
பார்சிலோனா அணியின் புதிய கேப்டனாக மெஸ்ஸி நியமனம்

ஸ்பெயின் நாட்டின் கிளப் அணியான பார்சிலோனாவுக்கு லயோனல் மெஸ்ஸி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஸ்பெயின் நாட்டின் கிளப் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமாக அணி பார்சிலோனா. கடந்த 2015-இல் இருந்து கேப்டனாக இருந்தவர் இனிஸ்டா. இவர், தற்போது ஜப்பான் கிளப் அணியில் இணைந்துள்ளார். 

இதையடுத்து, அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2015-இல் இருந்து மெஸ்ஸி 2-ஆவது கேப்டனாக செயல்பட்டு வந்தார். தற்போது இனிஸ்டா இல்லாததால் வரும் லாலிகா தொடரில் இருந்து பார்சிலோனா அணியின் முழு நேர கேப்டனாக மெஸ்ஸி பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

செர்ஜியோ பஸ்குவெட்ஸ், கெரார்ட் பிக் மற்றும் செர்ஜி ரோபெர்டோ ஆகியோர் முறையே 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது கேப்டனாக பொறுப்பேற்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com