‘இந்தியாவின் கேப்டவுன்’ நத்தம் மைதானத்தில் துலீப் கோப்பை ஆட்டங்கள்! (படங்கள்)

மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள அழகிய கிரிக்கெட் மைதானம் ஒன்று தமிழ்நாட்டில் உண்டு...
‘இந்தியாவின் கேப்டவுன்’ நத்தம் மைதானத்தில் துலீப் கோப்பை ஆட்டங்கள்! (படங்கள்)

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் கிரிக்கெட் மைதானம், மலைகள் சூழ அழகிய வடிவில் அமைந்துள்ளது. இதற்கு இணையாக மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள அழகிய கிரிக்கெட் மைதானம் ஒன்று தமிழ்நாட்டில் உண்டு. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரில் உள்ள என்பிஆர் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள என்பிஆர் கிரிக்கெட் மைதானம், இந்தியாவின் கேப்டவுன் என்று கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

இந்த மைதானம் தற்போது மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது. 

2014-ல் இங்கு ரஞ்சி ஆட்டம் ஒன்று நடைபெற்றது. கடந்த மூன்று வருடங்களாக டிஎன்பிஎல் டி20 ஆட்டங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன. தொலைக்காட்சிகளில் இந்த மைதானத்தைப் பார்த்தவர்கள் தமிழ்நாட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தையும் தாண்டி இன்னொரு அழகிய மைதானம் உள்ளதா என்று ஆச்சர்யப்பட்டார்கள்.

இந்நிலையில், ஆகஸ்ட் 17 அன்று தொடங்கும் துலீப் கோப்பை ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளன. சென்னையில் இப்போட்டியை நடத்த முடியாததால் நத்தம் மைதானத்தில் நடத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்தது. இதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது.  இந்த மைதானத்தில் 5 ஆயிரம் ரசிகர்கள் கேலரிகளில் அமர்ந்து கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்க்கும் வசதிகள் உள்ளன. 

இந்த வருட துலீப் கோப்பைப் போட்டி,  மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அடுத்ததாக செப்டம்பர் 4 அன்று இறுதிச்சுற்று ஆட்டமும் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. லீக் ஆட்டங்கள் நான்கு நாள்களும் இறுதிச்சுற்று ஐந்து நாள்களும் நடைபெறவுள்ளன. இவை அனைத்தும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறுவதால் பிங்க் நிறப் பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன. இப்போட்டியில் மூன்று அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவின் பிரபல வீரர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

இந்தியா புளூ அணியின் கேப்டனாக ஃபைஸ் ஃபஸலும் இந்தியா ரெட் அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த அபினவ் முகுந்தும் இந்தியா க்ரீன் அணியின் கேப்டனாக பார்தீவ் படேலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மூன்று அணிகளிலும் முகுந்த், பாபா அபரஜித், பாபா இந்திரஜித், கே. விக்னேஷ் ஆகிய தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

நத்தம் மைதானம்
நத்தம் மைதானம்
நத்தம் மைதானம்
நத்தம் மைதானம்
நத்தம் மைதானம்
நத்தம் மைதானம்
கேப்டவுன் மைதானம்
கேப்டவுன் மைதானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com