90களில் வீரர்களுக்கு உதவிய வடேகர்: சச்சின் இரங்கல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் அஜித் வடேகர் (77), உடல்நலக் குறைவால் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில்...
90களில் வீரர்களுக்கு உதவிய வடேகர்: சச்சின் இரங்கல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் அஜித் வடேகர் (77), உடல்நலக் குறைவால் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் புதன்கிழமை காலமானார்.

கடந்த 1958-59 காலகட்டத்தில் முதல்தர கிரிக்கெட்டில் தடம் பதித்த அஜித் வடேகர், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் 1966-67 காலகட்டத்தில் இடம்பிடித்தார். 1966-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்தார். இந்தியாவுக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வடேகர், 2,113 ரன்கள் எடுத்துள்ளார். 2 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி, 73 ரன்கள் எடுத்தார்.

இவர் தலைமையிலான இந்திய அணி கடந்த 1971-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

வடேகரின் மறைவு குறித்து சச்சின் கூறியதாவது:

வடேகர் காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். 90களில் அணி வீரர்களின் திறமைகளை வெளிக்கொணருவதில் முக்கியப் பங்காற்றினார். அவருடைய அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் எப்போதும் நன்றிக்கு உரியவர்களாக இருப்போம். இக்கடினமான நேரத்தில் அவருடைய குடும்பத்தினர் துயரத்தைத் தாங்கும் சக்தியுடன் இருக்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com