ஆசியப் போட்டி 2018: அதிக நம்பிக்கை தரும் இந்திய வில்வித்தை அணிகள்

ஜகார்த்தா ஆசியப் போட்டியில் பதக்கங்களை கண்டிப்பாக வெல்வார்கள் என்ற அதிக நம்பிக்கைஇந்திய வில்வித்தை அணிகள் ஏற்படுத்தி உள்ளன. 
ஆசியப் போட்டி 2018: அதிக நம்பிக்கை தரும் இந்திய வில்வித்தை அணிகள்


ஜகார்த்தா ஆசியப் போட்டியில் பதக்கங்களை கண்டிப்பாக வெல்வார்கள் என்ற அதிக நம்பிக்கைஇந்திய வில்வித்தை அணிகள் ஏற்படுத்தி உள்ளன. 
18-ஆவது ஆசியப் போட்டிகள் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் வரும் 18-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 541 வீரர்கள், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. ஹாக்கி, பளு தூக்குதல், மல்யுத்தம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. 
அதே நேரத்தில் வில்வித்தை போட்டியிலும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என அதிக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திறமையான வீரர்கள் உள்ளனர்.
குறிப்பாக காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் நிச்சயம் என்ற நிலை உள்ளது. ரெக்கர்வ் பிரிவு சற்று கடினமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணிகளுக்கு உலகக் கோப்பையில் இருமுறை தங்கம் வென்ற இத்தாலியின் நட்சத்திர பயிற்சியாளர் செர்ஜியோ பாகினி தீவிரமாக பயிற்சி அளித்துள்ளார்.
ஆடவர் பிரிவில் பதக்கங்கள் வெல்வதில் அதிக நம்பிக்கை தரும் வீரராக அபிஷேக் வர்மா உள்ளார். கடந்த 2014 இன்சியான் ஆசியப் போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் ரஜத் செளஹான், சந்தீப் குமாருடன் தங்கமும், தனி நபர் பிரிவில் வெள்ளியும் வென்றார். பின்னர் போலந்து உலகக் கோப்பை மூன்றாம் கட்டத்தில் தங்கம், ஷாங்காய் உலகக் கோப்பை முதல் கட்டத்தில் சின்னராஜு, அமன்ஜீத்சிங், ஆகியோருடன் வர்மா தங்கம் வென்றார். 
மகளிர் பிரிவில் ஜோதி சுரேகா அபாரமான திறனுடன் உள்ளார். வர்மா, சுரேகா இருவரும் ஆண்டு முழுவதும் நடந்த 4 கட்ட உலகக் கோப்பை போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 
இந்திய மகளிர் காம்பவுண்ட் வில்வித்தை அணி உலகின் நம்பர் ஒன் அணியாக உள்ளது. அதில் ஜோதி, திரிஷா தேவ், முஸ்கன் கிரார், மதுமிதா குமாரி உள்ளனர். கடந்த பெர்லின் உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனர். மேலும் இன்சியான் போட்டியில் வெண்கலம் வென்றனர். ஜகார்த்தா போட்டியில் தென்கொரியா, சீன தைபே அணிகளிடம் கடும் சவாலை இந்திய அணி எதிர் நோக்கினாலும், பதக்கம் வெல்வது உறுதி ஆகும். 
ரெக்கர்வ் பிரிவில் அதானு தாஸ் மற்றும் தீபிகா குமாரி ஆகியோர் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளனர். ஷாங்காய் உலகக் கோப்பையில் இருவரும் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். கலப்பு அணி பிரிவிலும் வெண்கலம் வென்றனர்.
வில்வித்தை மகளிர் பிரிவு போட்டிகளில் ராஞ்சியைச் சேர்ந்த 24 வயதான தீபீகா ஸ்திரமாக செயல்பட்டு வருகிறார். 15 வயதிலேயே யூத் உலக வில்வித்தை பட்டத்தை வென்ற அவர் மகளிர் அணி ரெக்கர்வ் பிரிவில் தங்கம் வென்றனர்.
தற்போது தீபிகா அபாரமான பார்மில் உள்ள நிலையில் 6 ஆண்டுகள் கழித்து அண்மையில் பெர்லின் உலகக் கோப்பையில் தங்கம் வென்றார். கடந்த ஆசியப் போட்டியில் ரெக்கர்வ் பிரிவில் வெறும் கையுடன் வந்தோம். ஆனால் தற்போதைய போட்டியில் நிச்சயம் பதக்கத்துடன் திரும்புவோம் என்றார் தீபிகா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com