உறுதியான ஆட்டத்தை கடைப்பிடிக்க ரவிசாஸ்திரி வலியுறுத்தல்

இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜில் சனிக்கிழமை தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் சீரான உறுதியான ஆட்டத்தை கடைபிடிக்க வேண்டும்


இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜில் சனிக்கிழமை தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் சீரான உறுதியான ஆட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது:
எத்தகைய கடினமான சூழலிலும் தற்போதைய முக்கிய தேவை உறுதியான சீரான ஆட்டத்தை ஆடுவதாகும். எந்த தனிப்பட்ட வீரரையும் தோல்விக்கு குறை கூறுவது சரியாக இருக்காது. இரு அணிகளின்பேட்ஸ்மேன்களும் தடுமாறினர். தேவை ஏற்படும் போது மன உறுதியுடன் ஆடுவதால் தான் நிலைமையை சமாளிக்க முடியும். நாட்டிங்ஹாம் டெஸ்டில் கண்டிப்பாக வெல்ல வேண்டும். கோலியும் முதுகுவலி பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இங்கிலாந்து அணியில் இணைவது குறித்து எந்த கவலையும் இல்லை. எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றார் சாஸ்திரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com