நாட்டிங்ஹாம் டெஸ்ட்: தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிராக டிரெண்ட்பிரிட்ஜில் நடக்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பந்த் இடம் பெறுவார் எனக் கருதப்படுகிறது.
நாட்டிங்ஹாம் டெஸ்ட்: தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பு


இங்கிலாந்துக்கு எதிராக டிரெண்ட்பிரிட்ஜில் நடக்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பந்த் இடம் பெறுவார் எனக் கருதப்படுகிறது.
ஐபிஎல் அணிகளின் ஒன்றான கொல்கத்தா டைரைடர்ஸ் அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். பேட்டிங், விக்கெட் கீப்பிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட நிலையில் ரித்திமன் சாஹா காயமுற்றதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்றார்.
ஆனால் பர்மிங்ஹாம், லார்ட்ஸ் டெஸ்ட் ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் ஆட்டம் குறிப்பிடும்படியாக இல்லை. இரண்டு டெஸ்ட்களிலும் நான்கு இன்னிங்ஸ்களில் முறையே 0, 20, 1, 0 என அவரது ரன் எண்ணிக்கை உள்ளது. விக்கெட் கீப்பிங்கிலும் தினேஷ் கார்த்திக் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது.
முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் ரிஷப் பந்தின் ஆட்டம் அபாரமாக உள்ளது என ஏ அணி பயிற்சியாளர் டிராவிட் பாராட்டியுள்ளார். வெவ்வேறு சூழல்களில் பேட்டிங் செய்ய பந்த் தகுதியானவர். அவர் தேசிய அணியில் இடம் பெற்று நன்றாக சோபிப்பார் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
20 வயதான பந்த் இடது கை பேட்ஸ்மேனாக உள்ளார். ஸ்விங் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் இடம் பெற்று, ஐபிஎல் ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்.
வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ள நாட்டிங்ஹாம் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் இடம் பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 4 டி 20 ஆட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடியுள்ள பந்த்துக்கு டெஸ்ட் அனுபவம் இல்லை. 
கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடந்த முத்தரப்பு போட்டியில் இந்திய ஏ அணி சார்பில் விளையாடிய பந்த் 64 ரன்களை குவித்தார். மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக 67-ம், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் 58, 61 ரன்களையும் எடுத்தார்.
தேர்வாளர் குழு தலைவர் பிரசாத் கூறுகையில்:
எம்.எஸ்.தோனியின் விக்கெட் கீப்பிங் முறைக்கும் இதர வீரர்களுக்கும் இடையே ஏராளமான இடைவெளி உள்ளது. ரித்திமன் சாஹா திறமையான வீரராக திகழ்ந்த நிலையில் காயமுற்று வெளியேறினார். இந்நிலையில் ரிஷப் பந்த் தனது திறமையை நிரூபித்தால் இந்திய அணி வலிமை பெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com