வடேகரின் மறைவுக்கு அஞ்சலி: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் நடைபெற்று வருகிறது...
வடேகரின் மறைவுக்கு அஞ்சலி: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் அஜித் வடேகர் (77), உடல்நலக் குறைவால் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் புதன்கிழமை காலமானார்.

கடந்த 1958-59 காலகட்டத்தில் முதல்தர கிரிக்கெட்டில் தடம் பதித்த அஜித் வடேகர், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் 1966-67 காலகட்டத்தில் இடம்பிடித்தார். 1966-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்தார். இந்தியாவுக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வடேகர், 2,113 ரன்கள் எடுத்துள்ளார். 2 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி, 73 ரன்கள் எடுத்தார்.

இவர் தலைமையிலான இந்திய அணி கடந்த 1971-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடேகரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் சென்னையில் தொடங்கியது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் நாளில் இரு அணி வீரர்களும் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com