டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் இலக்கு

3-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இந்திய அணி இங்கிலாந்துக்கு 521 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

3-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இந்திய அணி இங்கிலாந்துக்கு 521 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு  இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்லில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதைத்தொடர்ந்து, இந்திய அணி வலுவான 168 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து, புஜாராவும் கோலியும் 3-ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். 

இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்தில் புஜாரா ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி டெஸ்ட் அரங்கில் 23-ஆவது சதத்தை பதிவு செய்தார். அவர், 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாண்ட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, களமிறங்கிய பாண்டியா துரிதமாக ரன் குவித்து விளையாடினார். மறுமுனையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடிக்காக களமிறங்கிய ஷமியும் ஆட்டமிழந்தார். 

இந்நிலையில், அதிரடியாக விளையாடி வந்த பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்தார். அதே ஓவரில் இந்திய அணியும் 350 ரன்களை கடந்தது. இந்த ஓவரின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் எடுத்திருந்த போது 2-ஆவது இன்னிங்ஸை கோலி டிக்ளேர் செய்தார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com