ஆடவர் கபடி: தென்கொரியாவிடம் (24-23) சாம்பியன் இந்தியா அதிர்ச்சித் தோல்வி: 28 ஆண்டுகளில் முதல் தோல்வி

ஆசியப் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் கபடி போட்டியில் 7 முறை தங்கம் வென்ற இந்திய அணி 23-24 என்ற புள்ளிக்கணக்கில் தென்கொரியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
ஆடவர் கபடி: தென்கொரியாவிடம் (24-23) சாம்பியன் இந்தியா அதிர்ச்சித் தோல்வி: 28 ஆண்டுகளில் முதல் தோல்வி


ஆசியப் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் கபடி போட்டியில் 7 முறை தங்கம் வென்ற இந்திய அணி 23-24 என்ற புள்ளிக்கணக்கில் தென்கொரியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
கபடி இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 1990 முதல் ஆசியப் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட கபடியில் இந்தியா தொடர்ந்து 7 முறை தங்கம் வென்றது. இந்நிலையில் 8-ஆவது முறையாக தங்கம் வெல்லும் முனைப்புடன் இந்தியா அணி ஜகார்த்தா வந்துள்ளது.
இந்நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணிக்கு தொடக்கம் முதலே தென்கொரிய வீரர்கள் கடும் சவாலை ஏற்படுத்தினர். 
இந்திய வீரர்கள் சிறிது மெத்தனமாக ஆடியதால், அதை கொரிய வீரர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டனர். கொரிய ரைடர்கள் ஜங்கு குன் லீ, லீ டோங் ஜியோன், ஆகியோர் இந்திய தற்காப்பை அடிக்கடி ஊடுருவி சிக்கலை ஏற்படுத்தினர். இந்திய தற்காப்பு வீரர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர். 
அதே நேரத்தில் கொரிய தற்காப்பு ஆட்டம் சிறப்பாக காணப்பட்டது. யங் சங் கோ சிறப்பாக ஆடியதால் இந்திய வீரர்கள் அஜய் தாகூர், பர்தீப் நர்வால், ரோஹித்குமார், மொனு கோயட் ஆகியோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். ஒரு கட்டத்தில் 3 ரைடர்கள், 1 டிபண்டருடன் மட்டுமே ஆடும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. இதை பயன்படுத்தி கொரியா மளமளவென புள்ளிகளை சேகரித்தது. இரண்டாம் பாதியில் 14-14 என சமநிலை ஏற்பட்டாலும், கொரியா 3 புள்ளிகள் முன்னிலையை தொடர்ந்தனர். இறுதி நேரத்தில் 20-23 என இந்தியா பின்தங்கிய நிலையில் கிரீஷ் எர்னாக் அபாரமாக ஆடி முன்னிலையை குறைத்தார். கேப்டன் அஜய் தாகூர் கடைசியாக மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை.
ஏற்கெனவே வங்கதேசத்தை 50-21 எனவும், இலங்கையை 44-28 எனவும் இந்திய ஆடவர் அணி வென்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com