டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்ட்: கோலி அபார சதம்

டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்ட்: கோலி அபார சதம்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அபாரமாக ஆடி 507 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அபாரமாக ஆடி 507 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கேப்டன் கோலி அபாரமாக ஆடி சதமடித்தார். சேதேஸ்வர் புஜாராவும் சிறப்பாக ஆடி 72 ரன்களை எடுத்தார்.
டிரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வரும் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329, ரன்களை எடுத்தது.
இங்கிலாந்து அணி இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை தனது முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியாவின் ஹார்திக் பாண்டியா அபாரமாக பந்துவீசி 5 வீக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டை இழந்து 124 ரன்களை எடுத்திருந்தது. கோலி 8, புஜாரா 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதற்கிடையே மூன்றாவது நாளான திங்கள்கிழமை தனது இன்னிங்ஸை இந்திய வீரர்கள் தொடர்ந்தனர். புஜாரா-கோலி இணையை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர்.
9 பவுண்டரியுடன் 208 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த சேதேஸ்வர் புஜாரா, ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது 71.3 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை எடுத்திருந்தது.
கோலி 23-ஆவது சதம் : இந்திய கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 3 ரன்களில் சதத்தை தவற விட்ட நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 23-ஆவது சதமடித்தார். 
10 பவுண்டரியுடன் 197 பந்துகளில் 103 ரன்களை குவித்த கோலி, கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார்.
அவருக்கு பதிலாக ஆட வந்த ரிஷப் பந்த் 1 ரன் எடுத்த நிலையிலும், ரஹானே 29 ரன்களுக்கும் ஆட்டமிழ்தனர். அப்போது ஓவர்களில் 108 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 339 ரன்களை எடுத்திருந்தது.
ஹார்திக் பாண்டியா 6 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது இந்திய அணி 507 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com