டென்னிஸ்- அங்கிதா ரெய்னா, ராம்குமார் ராமநாதன் காலிறுதிக்கு தகுதி

மகளிர் டென்னிஸ் நாக் அவுட் சுற்றில் வென்று இந்தியாவின் அங்கிதா ரெய்னா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டென்னிஸ்- அங்கிதா ரெய்னா, ராம்குமார் ராமநாதன் காலிறுதிக்கு தகுதி


மகளிர் டென்னிஸ் நாக் அவுட் சுற்றில் வென்று இந்தியாவின் அங்கிதா ரெய்னா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தோனேஷேயாவின் குமுல்யா பிட்ரைஸை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அங்கிதா காலிறுதிக்கு முன்னேறினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அங்கிதா இந்தோனேஷேய வீராங்கனை குமுல்யாவுக்கு வாய்ப்பே தரவில்லை.
மற்றொரு மகளிர் ஆட்டத்தில் கர்மன் கெளர் தண்டி 6-1, 6-0 என மங்கோலியாவின் ஜர்காவை வென்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ராம்குமார் ராமநாதன் 6-0, 7-6 என்ற கணக்கில் ஹாங்காங்கின் வோங் கிட்டை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவில் சுமித் நாகல்-ராம்குமார் இணை 6-1, 6-1 என நேபாளத்தின்பஸ்டோலா-பஜ்ராச்சார்யா இணையை வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com