2015- ல் சென்னைக்கும் இப்போது கேரளாவுக்கும் வெற்றிகளைச் சமர்ப்பித்த இந்திய வீரர்கள்!

2015 டிசம்பரில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டார்கள். அப்போது இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான...
2015- ல் சென்னைக்கும் இப்போது கேரளாவுக்கும் வெற்றிகளைச் சமர்ப்பித்த இந்திய வீரர்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.

டெஸ்ட் தொடரில் 2-0 என்ற இங்கிலாந்து முன்னிலை பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்களையும், இங்கிலாந்து 161 ரன்களையும் எடுத்தன. இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் கோலி (103), புஜாரா (72), பாண்டியா (52) ஆகியோரின் அபார ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. 

5-ம் நாளான இன்று 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து. கடைசியாக, ஆண்டர்சன் 11 ரன்களில் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  இதனால் மூன்றாவது டெஸ்டை இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டுள்ளது. ரஷித் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியத் தரப்பில் பூம்ரா 5 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஷமி, பாண்டியா ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. நான்காவது டெஸ்ட், ஆகஸ்ட் 30 அன்று தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் ஆட்ட நாயகனாக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வாகியுள்ளார். பரிசளிப்பு விழாவில் பேசிய கோலி, இந்த வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். 

2015 டிசம்பரில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டார்கள். அப்போது இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. டிசம்பர் 7 அன்று டெல்லியில் நடந்துமுடிந்த கடைசி டெஸ்டில் ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அப்போது பேசிய ரஹானே, இந்த விருதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கும் அவர்களுக்கு உதவும் இந்திய  ராணுவத்துக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com