ஒரு வருடத்தில் ரூ. 60 கோடி வருவாய் ஈட்டிய பி.வி. சிந்து: ஃபோர்ப்ஸ் தகவல்!

இந்தப் பட்டியலில் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்...
ஒரு வருடத்தில் ரூ. 60 கோடி வருவாய் ஈட்டிய பி.வி. சிந்து: ஃபோர்ப்ஸ் தகவல்!

சர்வதேச அளவில் கடந்த ஓர் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீராங்கனைகள் 10 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. அதில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 7-ம் இடம் பிடித்துள்ளார். 

ஜுன் 1, 2017 முதல் ஜுன் 1, 2018 வரையிலான வருவாய் கணக்கிடப்பட்டுள்ளது. போட்டி வருவாய் மற்றும் விளம்பர வருவாய் என ஒரு வருடத்தில் கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தின் கணக்கீடு இது. இந்தப் பட்டியலில் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவருடைய வருமானம் ரூ. 126 கோடி.

சிந்துவின் ஒரு வருட வருமானம்,  ரூ. 60 கோடி. இவர், நெ.1 டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹலப்பை விடவும் அதிக வருவாயை ஈட்டியுள்ளார். எனினும் சிந்துவின் வருமானத்தில் 90 சதவிகிதம் விளம்பரங்களின் வழியாகக் கிடைத்துள்ளன. 

கடந்த 2017 மற்றும் 2018 உலக சாம்பியன் போட்டிகளில் பி.வி. சிந்து 2-ம் இடம் பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்தார். இதற்காக இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடமிருந்து சிந்துவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 13 கோடி கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com