நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட அணி நிர்வாகம்: தில்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் மாறியது ஏன்?

தில்லி அணி அப்படியே தலைகீழ். தற்போது அந்த அணியின் பெயர் ஏன் மாறியது என்று கீழ்க்கண்ட காரணங்களைப் படித்தால்...
நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட அணி நிர்வாகம்: தில்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் மாறியது ஏன்?

ஐபிஎல் அணிகளில் ஒன்றான தில்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் தில்லி கேபிடல்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றம் சமூகவலைத்தளங்களில் ஆச்சர்யத்தை உண்டுபண்ணியுள்ளது. ஆனால், தில்லி அணியின் கடந்தகால வரலாற்றைப் பார்க்கும்போது இதன் அர்த்தம் நமக்கு நன்குப் புரியும்.

ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கும் தில்லி அணிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ்தான். இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் - சென்னையின் பிளேஆஃப் தகுதி

2008 - ஆமாம் (இறுதிச்சுற்றில் தோல்வி)
2009 - ஆமாம்
2010 - ஆமாம் (சாம்பியன்)
2011 - ஆமாம் (சாம்பியன்)
2012 - ஆமாம் (இறுதிச்சுற்றில் தோல்வி)
2013 - ஆமாம் (இறுதிச்சுற்றில் தோல்வி)
2014 - ஆமாம்
2015 - ஆமாம் (இறுதிச்சுற்றில் தோல்வி)
2018 - ஆமாம் (சாம்பியன்)

தில்லி அணி அப்படியே தலைகீழ். அந்த அணியின் பெயர் ஏன் மாறியது என்று கீழ்க்கண்ட காரணங்களைப் படித்தால் உங்களுக்குப் புரிந்துவிடும்.

* 2018 ஐபிஎல்-லில் தில்லி டேர்டெவில்ஸ் கடைசி இடம் பிடித்தது. 14 ஆட்டங்களில் 5-ல்தான் வெற்றி பெற்றது.
 
* ஐபிஎல் தொடக்கத்தில் தில்லி அணியின் கேப்டனாக இருந்த கம்பீர், பாதியில் அணியிலிருந்து விலகினார். முதல் 6 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றதோடு கம்பீரும் ஐந்து ஆட்டங்களில் 85 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து அவர் பதவி விலக, 23 வயது ஷ்ரேயஸ் ஐயர் கேப்டன் ஆனார். இந்த மாற்றமும் தில்லி அணிக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கவில்லை. கடைசியில் கடைசி இடமே வாய்த்தது. 
 
*கடைசி இரு இடங்களை அதிகமுறை பிடித்த அணிகளில் தில்லிக்குத்தான் முதலிடம். ஆரம்பத்தில் வலுவான அணியாக இருந்த தில்லி, பிறகு கட்டெறும்பாகிவிட்டது. ஐந்து முறை கடைசி இரு இடங்களைப் பிடித்து தில்லி ரசிகர்களை மிகவும் சோதித்துள்ளது.

* இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் என 8 அணிகளில் தில்லி அணிதான் ஒருமுறைகூட ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றதில்லை.

* பெங்களூர், தில்லி, பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது. குறைந்த தடவை பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றதிலும் அதிகமுறை கடைசி இரு இடங்களைப் பிடித்ததிலும் தில்லி, பஞ்சாப் ஆகிய அணிகளை ஐபிஎல்-லின் மோசமான அணிகளாகக் கருதலாம். 

*

தில்லி அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருவதால் இந்த நிலையை மாற்றவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது அணி நிர்வாகம். 2019 சீசனுக்கு அணியைப் பலப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் 10 வீரர்களை விடுவித்து விட்டது. மேலும் ஹைதராபாத் அணியில் இருந்து ஷிகர் தவனை பெறுவதற்காக 3 வீரர்களையும் பரிமாற்றம் செய்து கொண்டது.

ஐபிஎல் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது முதல் தில்லி டேர்டெவில்ஸ் பெயர் நீடித்து வருகிறது. இந்நிலையில் அதன் உரிமையாளரான ஜிஎம்ஆர் குழுமம், ஜேஎஸ்டபிள்யு ஸ்போர்ட்ஸ் ஆகியவை இணைந்து புதிதாக தில்லி கேபிடல்ஸ் என அணியின் பெயரை மாற்றியுள்ளன. இதன்மூலம் புதிய பெயர், புதிய அணியுடன் 2019 ஐபிஎல் போட்டியை எதிர்கொள்ளமுடியும் என்று அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது.

ஐபிஎல் போட்டியின் சிறந்த அணி எது? மோசமான அணி எது?

 அணி சாம்பியன் பிளேஆஃப்- க்குத்  தகுதி கடைசி 2 இடங்களில்
 சென்னை  3 9 0
 மும்பை 3 7 1
 கொல்கத்தா  2 6 1
 ஹைதராபாத்  2 6 2
 ராஜஸ்தான் 1 4 1
 பெங்களூர் 0 5 3
 பஞ்சாப் 0 2  4
 தில்லி 0 3 5

கடந்த 11 ஐபிஎல் போட்டிகளும் அணிகளின் தேர்ச்சி விவரமும்

2008

சாம்பியன் - ராஜஸ்தான் ராயல்ஸ் 
இரண்டாம் இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) ராஜஸ்தான், பஞ்சாப், சென்னை, தில்லி
கடைசி இரு இடங்கள்: பெங்களூர், ஹைதராபாத் (கடைசி இடம்).

2009

சாம்பியன் - டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் 

இரண்டாம் இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) தில்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் 
கடைசி இரு இடங்கள்: மும்பை, கொல்கத்தா (கடைசி இடம்).

2010

சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்

இரண்டாவது இடம் - மும்பை இந்தியன்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர்
கடைசி இரு இடங்கள்: ராஜஸ்தான், பஞ்சாப் (கடைசி இடம்).

2011

சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ் 

இரண்டாவது இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா
கடைசி இரு இடங்கள்: புணே, தில்லி (கடைசி இடம்).

2012

சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை
கடைசி இரு இடங்கள்: ஹைதராபாத், புணே (கடைசி இடம்).

2013

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்

இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) சென்னை, மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத்
கடைசி இரு இடங்கள்: புணே, தில்லி (கடைசி இடம்).

2014

சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இரண்டாவது இடம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) பஞ்சாப், கொல்கத்தா, சென்னை, மும்பை
கடைசி இரு இடங்கள்: பெங்களூர், தில்லி (கடைசி இடம்).

2015

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்
இரண்டாவது இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) சென்னை, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான்
கடைசி இரு இடங்கள்: தில்லி, பஞ்சாப் (கடைசி இடம்).

2016

சாம்பியன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இரண்டாவது இடம் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) குஜராத், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா
கடைசி இரு இடங்கள்: புணே, பஞ்சாப் (கடைசி இடம்).

2017

சாம்பியன் - மும்பை இந்தியன்ஸ்
இரண்டாவது இடம் - ரைசிங் புணே சூப்பர்ஜெயண்ட்

பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி) மும்பை, புணே, ஹைதராபாத், கொல்கத்தா
கடைசி இரு இடங்கள்: குஜராத், பெங்களூர் (கடைசி இடம்). 

2018


சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்
இரண்டாவது இடம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பிளே ஆஃப்-பில் பங்கேற்ற அணிகள்: (வரிசைப்படி): ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் 
கடைசி இரு இடங்கள்: பஞ்சாப், தில்லி (கடைசி இடம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com