ரஞ்சி கோப்பை: சரிவில் இருந்து மீண்டது தமிழகம்

கேரளத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை பி பிரிவு ஆட்டம் ஒன்றில் சரிவில் இருந்து மீண்டது தமிழகம்.
ரஞ்சி கோப்பை: சரிவில் இருந்து மீண்டது தமிழகம்


கேரளத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை பி பிரிவு ஆட்டம் ஒன்றில் சரிவில் இருந்து மீண்டது தமிழகம்.
எலைட் பி பிரிவில் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தமிழகம் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தொடக்கத்திலே சரிவைக் கண்டது. 31/4 என தடுமாற்றிக் கொண்டிருந்த தமிழகம் பின்னர் கேப்டன் இந்திரஜித், ஷாருக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மீண்டது.
பி. அபரஜித் 3, தொடக்க வீரர் கெளஷிக் 19, தினேஷ் கார்த்திக் 4, சொற்ப ரன்களில் வெளியேறினர். அனுபவ வீரர் அபிநவ் முகுந்தும் டக் அவுட்டானார். இந்திரஜித்-ஜெகதீசன் இணை 5-ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தது. பின்னர் ஷாருக்குடன் சேர்ந்து 6-ஆது விக்கெட்டுக்கு 103 ரன்களை சேர்த்தார் இந்திரஜித்.
87 ரன்கள் எடுத்த அவர் வாரியர் பந்தில் போல்டானார். ஷாருக்கான் 87 ரன்களுடனும், மொகமது 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். மொத்தம் 249/6. கேரள தரப்பில் சந்தீப் வாரியர் 3-42 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
மொஹாலியில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ஹிமாச்சலப்பிரதேசம் 244/5 ரன்களை எடுத்துள்ளது. தவன் 61, கங்டா 58, காசி 50.
இந்தூரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஹைதராபாத் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹிமாலயே அகர்வால் 69. அவேஷ்கான் 7-24. மத்தியப்பிரதேசம் 168/1, அஜய் ரோஹோரா 81, ரஜத் படிதார் 51.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com