கேட்சை நழுவவிட்டதால் புதிய உலக சாதனையை நிகழ்த்த முடியாமல் போன ரிஷப் பந்த்!

புதிய உலக சாதனை படைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தபோதும் அதைப் பயன்படுத்திக்கொள்ள அவர் தவறிவிட்டார்...
கேட்சை நழுவவிட்டதால் புதிய உலக சாதனையை நிகழ்த்த முடியாமல் போன ரிஷப் பந்த்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.

இந்த டெஸ்டில் 11 கேட்சுகள் பிடித்து உலக சாதனையைச் சமன் செய்துள்ளார் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். ஜேக் ரஸல், டி வில்லியர்ஸ் ஆகியோர் 11 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் உள்ள நிலையில் அவர்களுடன் ரிஷப் பந்தும் இணைந்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களில் சாஹா 10 கேட்சுகள் பிடித்துள்ளதே இதற்கு முன்புவரை சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ளார் ரிஷப் பந்த்.

எனினும் ரிஷப் பந்த் புதிய உலக சாதனை படைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தபோதும் அதைப் பயன்படுத்திக்கொள்ள அவர் தவறிவிட்டார். பூம்ரா வீசிய 104.5 ஓவரின்போது ஆஸ்திரேலிய அணி 242 ரன்கள் எடுத்திருந்த நிலையில், லயன் அளித்த கேட்சைத் தவறவிட்டார் ரிஷப் பந்த். கேட்ச் பிடிக்கும் முன்பு தவறுதலாக இடம்பக்கம் நகர்ந்ததால் வலப்பக்கம் வந்த கேட்சை அவரால் பிடிக்கமுடியாமல் போனது. இதனால் 12 கேட்சுகளுடன் புதிய உலக சாதனை படைக்கமுடியாமல் போனது.

டெஸ்ட் ஆட்டத்தில் அதிக கேட்சுகள்

ஜேக் ரஸல் vs தென் ஆப்பிரிக்கா, 1995 - 11 கேட்சுகள்
டி வில்லியர்ஸ் vs பாகிஸ்தான், 2013 - 11 கேட்சுகள்
ரிஷப் பந்த் vs ஆஸ்திரேலியா 2018 - 11 கேட்சுகள்

டெஸ்ட் ஆட்டத்தில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய வீரர்கள்

ரிஷப் பந்த் vs ஆஸ்திரேலியா 2018 - 11 கேட்சுகள்
சாஹா vs தென் ஆப்பிரிக்கா, 2018 - 10 கேட்சுகள்
தோனி vs ஆஸ்திரேலியா - 2014

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com