அடிலெய்ட் டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம், ஆஸி. 104/4

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அடிலெய்ட் டெஸ்ட்: இந்தியா ஆதிக்கம், ஆஸி. 104/4

நாதன் லயன் 6 விக்கெட்;இந்தியா வெல்ல 6 விக்கெட் தேவை
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸி. அணி வெற்றி பெற 219 ரன்களை எடுக்க வேண்டும் அல்லது இந்தியா வெல்ல 6 விக்கெட்டை வீழ்த்த வேண்டும்.
 இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெற்றி பெற 323 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸி. அணி ஆட்டநேர முடிவில் 104/4 ரன்களை எடுத்துள்ளது.
 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் 6-ஆம் தேதி தொடங்கியது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சேதேஸ்வர் புஜாரா அபாரமாக ஆடி 123 ரன்களுடன் அணியை சரிவில் இருந்து மீட்டார்.
 ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்களை எடுத்தது. டிராவிஸ் ஹெட் அபாரமாக ஆடி 72 ரன்களை குவித்தார்.
 இந்தியா 307
 பின்னர் இரண்டாவது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்திருந்தது. 40 ரன்களுடன் புஜாராவும், 1 ரன்னுடன் ரஹானேவும் களத்தில் இருந்தனர்.
 நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை இருவரும் தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் 87 ரன்களை சேர்த்தனர். 74-ஆவது ஓவரில் நாதன் பந்துவீச்சில் அவுட்டாகும் அபாயத்தில் இருந்து ரஹானே தப்பினார். 77-ஆவது ஓவரில் 200 ரன்களை கடந்தது இந்தியா.
 புஜாரா 20-ஆவது அரை சதம்
 புஜாரா 140 பந்துகளில் தனது 20-ஆவது அரை சதத்தைக் கடந்தார். அவர் 9 பவுண்டரியுடன் 204 பந்துகளில் 71 ரன்களுடன் லயன் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த ரோஹித் சர்மா 1 ரன்னுடனும், ரிஷப் பந்த் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 28 ரன்களுடனும் லயன் பந்தில் ஆட்டமிழந்தனர்.
 ரஹானே 70 (16-ஆவது அரைசதம்)
 அதன் பின்னர் அஸ்வின் 5 ரன்களுக்கு வெளியேறினார். புஜாராவோடு இணைந்து சிறப்பாக ஆடி வந்த ரஹானே 7 பவுண்டரிகளோடு 147 பந்துகளில் 70 ரன்களை எடுத்து லயன் பந்தில் வெளியேறினார். இஷாந்த் சர்மா, முகமது சமி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பும்ரா ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார்.
 இறுதியில் 106.5 ஓவர்களில் 307 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது.
 நாதன் லயன் 6 விக்கெட் அபாரம்
 ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அபாரமாக பந்துவீசி 122 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தினார். மிச்செல் ஸ்டார்க் 3-40, ஹேஸல்வுட் 1-43 விக்கெட்டை வீழ்த்தினர். நாதன் லயன் 13-ஆவது முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
 ஆஸ்திரேலியா 104/4
 பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ûஸ ஆடத் தொடங்கியது ஆஸி. அணி. ஆனால் தொடக்கமே தடுமாற்றமாக அமைந்தது. ஆரோன் பின்ச் 11, மார்கஸ் ஹாரிஸ் 26, உஸ்மான் கவாஜா 8, பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோர் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியை தந்தனர். ஷேன் மார்ஷ்-டிராவிஸ் ஹெட் இணை நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த முற்பட்டது.
 ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணி 49 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 104 ரன்களை எடுத்திருந்தது. ஷேன் மார்ஷ் 31, டிராவிஸ் ஹெட் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
 அஸ்வின்-சமி தலா 2 விக்கெட்
 அஸ்வின் 2-44, முகமது சமி 2-15 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு?
 இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி வரும் நிலையில் இறுதி நாளான திங்கள்கிழமை 6 விக்கெட்டை வீழ்த்த வேண்டியுள்ளது.
 ஆஸி. அணி வெல்ல 219 ரன்களை எடுக்க வேண்டும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com