மெஸ்ஸியின் அதிரடியால் முதலிடத்தில் பார்சிலோனா

நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் பார்சிலோனா அணி லா லிகா கால்பந்து போட்டியில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
மெஸ்ஸியின் அதிரடியால் முதலிடத்தில் பார்சிலோனா

நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் பார்சிலோனா அணி லா லிகா கால்பந்து போட்டியில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
 நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி மற்றும் எஸ்பனியால் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கேப்டன் மெஸ்ஸி ப்ரீ-கிக் மூலம் 2 கோல்களை அபாரமாக அடித்தார். மற்றொரு கோலை அடிக்கவும் உதவினார். லூயிஸ் ஸ்வாரஸ், உஸ்மான் டெம்பிளே ஆகியோரும் கோலடித்தனர்.
 இறுதியில் 4-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா வென்றது. இதன் மூலம் பட்டியலில் பார்சிலோனா முதலித்தை தக்க வைத்துக் கொண்டது. அதலெட்டிகோ மாட்ரிட். செவில்லா அணிகள் முதலிடத்தை பெறும் கனவு தகர்ந்தது.
 ப்ரீமியர் லீக்: செல்ஸி வெற்றி
 இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை இரவு லண்டனில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியை 2-0 என்ற கோல் கணக்கில் செல்ஸி அணி வீழ்த்தியது. கோலோ கண்டே, டேவிட் லூயிஸ் ஆகியோர் அற்புதமாக கோலடித்தனர். ஆர்செனல் அணி 1-0 என ஹட்டர்ஸ்பீல்ட்டை வென்றது. மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-1 என புல்ஹாம் அணியை வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com