ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களின் பட்டியல்!

2019 ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் 346 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 346 வீரர்களிலிருந்து 9 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்...
ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களின் பட்டியல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) 2019-ம் ஆண்டுக்கான ஏலம் வரும் 18-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.

2019 ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் 346 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 346 வீரர்களிலிருந்து 9 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

வீரர்களின் உயர்ந்தபட்ச அடிப்படைத் தொகையான ரூ.2 கோடி வரம்புக்குள் ஒரு இந்திய வீரர் கூட வரவில்லை. மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், லசித் மலிங்கா, ஷான் மார்ஷ், காலின் இங்கிராம், கோரே ஆண்டர்சன், ஏஞ்சலோ மேத்யூஸ், சாம் கர்ரன், டி ஆர்சி ஷார்ட் ஆகியோர் ரூ.2 கோடி வரம்பில் உள்ளனர். 

கடந்த முறை ரூ.11.5 கோடிக்கு பெறப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட் மட்டுமே இந்திய வீரர்களில் ரூ.1.5 கோடிக்கு அடிப்படைத் தொகை வரம்பில் உள்ளார். முன்னாள் பஞ்சாப் அணி வீரர்கள் யுவராஜ் சிங், அக்ஸர் பட்டேல், கொல்கத்தா வீரர் ரித்திமன் சாஹா விலை ரூ.1 கோடியாக நிர்ணயித்துள்ளனர். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஷமி விலை ரூ.1 கோடியாகவும், இஷாந்த் சர்மா, நமன் ஓஜா விலை ரூ.75 லட்சமாகவும் உள்ளது. சேதேஸ்வர் புஜாரா, மனோஜ் திவாரி, ஹனுமா விஹாரி, குர்கரீத் சிங், மொகித் சர்மா அடிப்படை விலை ரூ.50 லட்சமாக உள்ளது குறிப்பிடத்த்கது.

இந்நிலையில் இந்த ஏலத்தில் 9 தமிழக வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவுள்ள தமிழக கிரிக்கெட் வீரர்களும் அவர்களுடைய அடிப்படைத் தொகைகளும்:

1. பாபா இந்திரஜித் - ரூ. 20 லட்சம்
2. பாபா அபரஜித் - ரூ. 20 லட்சம்
3. அனிருதா ஸ்ரீகாந்த் - ரூ. 30 லட்சம்
4. எம். அஸ்வின் முருகன் - ரூ. 20 லட்சம்
5. சி.வி. வருண் சக்கரவர்த்தி - ரூ. 20 லட்சம்
6. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
7. ஆர். விவேக் - ரூ. 20 லட்சம்
8. ஆர். சஞ்சய் யாதவ் - ரூ. 20 லட்சம்
9. கே. விக்னேஷ்  - ரூ. 30 லட்சம்
 

2018 ஐபில் ஏலத்தில் என்ன நடந்தது?

2018 ஐபிஎல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகி இந்த வருட ஐபிஎல்-லில் விளையாடிய தமிழக வீரர்கள்

2018 ஐபிஎல்-லில் பங்குபெற்ற தமிழ்நாட்டு வீரர்கள்

1. ஆர். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி  
3. விஜய் சங்கர் - தில்லி ரூ. 3.20 கோடி 
4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி 
5. எம். அஸ்வின் - பெங்களூர் - ரூ. 2.20 கோடி
6. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி 
7. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம் 
8. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம் 

கடந்த ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர் பாபா அபரஜித்தும் அவரது சகோதரர் இந்திரஜித்தும் எந்த அணிக்கும் தேர்வாகவில்லை. அபினவ் முகுந்த், ரஹில் ஷா, அதிசயராஜ் டேவிட்சன், சாய் கிஷோர், சஞ்சய் யாதவ் போன்ற தமிழக வீரர்களையும் எந்த அணியும் சீந்தவில்லை.

2019 ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் எந்தத் தமிழக வீரர் ஜாக்பாட் அடிக்கப்போகிறார், ஏமாற்றம் அடையவுள்ள தமிழக வீரர்கள் யார் யார் என்பது வரும் 18-ம் தேதி தெரிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com