டிஆர்எஸ் முறைக்கு ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் எதிர்ப்பு

டிஆர்எஸ் மேல்முறையீட்டு முறைக்கு ஆஸி. அணி கேப்டன் டிம் பெய்ன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டிஆர்எஸ் முறைக்கு ஆஸி. கேப்டன் டிம் பெய்ன் எதிர்ப்பு


டிஆர்எஸ் மேல்முறையீட்டு முறைக்கு ஆஸி. அணி கேப்டன் டிம் பெய்ன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி தோல்வியடைந்தது. நடுவர்களின் சில முடிவுகள் தொடர்பாக டிஆர்எஸ் முறையில் மேல்முறையீடு செய்த போது அவை ஆஸி.அணிக்கு பாதகமாக அமைந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானே, அதே போல் புஜாராவுக்கு எதிரான முறையீடுகளில் அவர்கள் அவுட்டில்லை என டிஆர்எஸ் முறையில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆஸி. அணியினர் அதிருப்தி அடைந்தனர்.
இதுதொடர்பாக கேப்டன் பெய்ன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: டிஆர்எஸ் முறை என்பது சரியான முறை இல்லை. எனது கேள்விகளுக்கு இதில் சரியான விடைகள் கிடைக்கவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. ஏராளமான பந்துகள் ஸ்டம்புகளுக்கு மேலே செல்கின்றன. இதை நான் அறிவேன். ஆனால் ஒளிபரப்பில் அவ்வாறு இல்லை.
இந்தியாவிலும் தோனி கேப்டனாக இருந்த போது டிஆர்எஸ் தொழில்நுட்ப மேல்முறையீட்டுக்கு எதிர்ப்பு எழுந்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com