டிசம்பர் 18-இல் ஐபிஎல் வீரர்கள் ஏலம்

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) 2019 ஏலத்துக்கான உயர்ந்தபட்ச அடிப்படைத் தொகை வரம்புக்குள் ஒரு இந்திய வீரர் கூட வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) 2019 ஏலத்துக்கான உயர்ந்தபட்ச அடிப்படைத் தொகை வரம்புக்குள் ஒரு இந்திய வீரர் கூட வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக வீரர்கள் ஏலம் வரும் 18-இல் ஜெய்ப்பூரில் நடக்கிறது. மொத்தம் 1003 வீரர்கள் தங்கள் பெயர்களை ஏலத்துக்காக பதிவு செய்த நிலையில், 8 அணிகளின் நிர்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரர்கள் பட்டியலை அளித்தபின் பட்டியல் குறைக்கப்படும்.
இந்திய வீரர்கள் மொத்தம் 346 பேர் பட்டியலில் உள்ளனர். அதில் உயர்ந்தபட்ச அடிப்படைத் தொகையான ரூ.2 கோடி வரம்புக்குள் ஒரு இந்திய வீரர் கூட வரவில்லை. மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், லசித் மலிங்கா, ஷான் மார்ஷ், காலின் இங்கிராம், கோரே ஆண்டர்சன், ஏஞ்சலோ மேத்யூஸ், சாம் கர்ரன், டி ஆர்சி ஷார்ட் ஆகியோர் ரூ.2 கோடி வரம்பில் உள்ளனர். கடந்த முறை ரூ.11.5 கோடிக்கு பெறப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனதிகட் மட்டுமே உள்ளூர் வீரர்களில் ரூ.1.5 கோடிக்கு அடிப்படைத் தொகை வரம்பில் உள்ளார். முன்னாள் பஞ்சாப் அணி வீரர்கள் யுவராஜ் சிங், அக்ஸர் பட்டேல், கொல்கத்தா வீரர் ரித்திமன் சாஹா விலை ரூ.1 கோடியாக நிர்ணயித்துள்ளனர். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் சமி விலை ரூ.1 கோடியாகவும், இஷாந்த் சர்மா, நமன் ஓஜா விலை ரூ.75 லட்சமாகவும் உள்ளது. சேதேஸ்வர் புஜாரா, மனோஜ் திவாரி, ஹனுமா விஹாரி, குர்கரீத் சிங், மொகித் சர்மா அடிப்படை விலை ரூ.50 லட்சமாக உள்ளது குறிப்பிடத்த்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com